

பெங்களூரு: ஆன்லைன் கேமிங் தளமான வின்சோ (WinZO) தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை நடத்தவதாக புகார் எழுந்தது.
மேலும், பெரும்பான்மையான நேரங்களில் வாடிக்கையாளர்கள் மனிதர்களுடன் விளையாடாமல் மென்பொருளுடன் விளையாடும் வகையில் ஆட்டத்தை வடிவமைத்தது தெரியவந்தது. இதைக் கண்டறிந்த சில வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தை கோரினர்.
ஆனால், வின்சோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் ரூ.43 கோடியை முடக்கி வைத்திருந்தது. மேலும் அந்நிறுவனம் அமெரிக்க வங்கிக் கணக்கில் ரூ.489 கோடியை மறைத்து வைத்திருந்தது. அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.505 கோடி மதிப்பிலான பத்திரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து வின்சோ நிறுவனர்கள் சவுமியா சிங் ரத்தோர், பவன் நந்தா ஆகியோர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இருவரையும் 7 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.