பங்குச் சந்தை வர்த்தக மோசடியில் ரூ.35 கோடியை இழந்த மும்பை முதியவர்!

4 ஆண்டுகளுக்கு பிறகே ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
பிரதிநிதித்துவப் படம் - மெட்டா ஏஐ

பிரதிநிதித்துவப் படம் - மெட்டா ஏஐ

Updated on
1 min read

மும்பை: பங்​குச் சந்தை வர்த்தக மோசடி​யில் மும்பை முதி​ய​வர் ஒரு​வர் ரூ.35 கோடியை இழந்​தார். அது​வும் 4 ஆண்​டு​களுக்கு பிறகே தாம் ஏமாற்​றப்​பட்​டது அவருக்கு தெரிய​வந்​தது.

மகா​ராஷ்டி​ரா​வின் மேற்கு மாதுங்​காவை சேர்ந்​தவர் பரத் ஹரக்​சந்த் ஷா (72). இவரும் இவரது மனை​வி​யும் பரேல் பகு​தி​யில் புற்​று​நோ​யாளி​களுக்கு குறைந்த கட்​ட​ணத்​தில் விடுதி நடத்தி வரு​கின்​றனர். 1984-ல் பரத் ஷாவின் தந்தை இறந்த பிறகு அவரது பெயரில் இருந்த பங்​கு​கள் இவரது பெயருக்கு வந்தன. என்றாலும் பரத் ஷாவுக்கு பங்​குச் சந்தை அனுபவம் இல்​லாத​தால் அவர் பங்கு வர்த்தகத்​தில் ஈடு​பட​வில்​லை.

இந்​நிலை​யில் 2020-ல் நண்​பர் ஒரு​வரின் ஆலோ​சனைப்​படி பரத் ஷா பங்கு வர்த்​தகத்​தில் இறங்​கி​னார். இதற்​காக அவரும் அவரது மனை​வி​யும் ‘குளோப் கேப்பிட்டல் மார்க்​கெட்​ஸ்’ என்ற நிறு​வனத்​துடன் இணைந்து டீமேட் கணக்கு தொடங்​கினர். பிறகு அவர்​கள் தங்​கள் பெயரில் உள்ள பங்​கு​களை நிறு​வனத்​தின் பெயருக்கு மாற்​றினர்.

இதையடுத்து பரத் ஷா, அவரது மனை​வி​யின் டீமேட் கணக்​கு​களை அந்த நிறு​வனத்​தின் அக் ஷய் பரி​யா, கரண் சிரோயா ஆகிய 2 பிர​தி​நி​தி​கள் தங்​கள் கட்​டுப்​பாட்​டில் எடுத்​துக் கொண்டனர். அவர்​கள் தின​மும் பரத் ஷாவை தொடர்பு கொண்டுபேசியதுடன் அடிக்கடி வீட்​டுக்​கும் வந்து சென்​றனர். அவர்​களை நம்​பிய ஷாவும் அவர்​கள் கேட்ட ஓடிபி உள்​ளிட்ட அனைத்து தகவல்​களை கொடுத்து வந்​தார்.

அவர்​கள் கூறியது போல மெயில்​களுக்கு பதில் அனுப்​பி​னார். 2020 மார்ச் முதல் 2024 ஜூன் வரை பரத் ஷா பெற்ற வரு​டாந்​திர அறிக்​கைகள் தொடர்ந்து லாபங்​களை காட்​டின. இந்​நிலை​யில் 2024 ஜூலை​யில் பரத் ஷா மற்​றும் அவரது மனை​வி​யின் கணக்குகளில் ரூ.35 கோடி கடன் இருப்​ப​தாக​வும் அதை உடனே செலுத்​தா​விட்​டால் அவர்​களின் பங்​கு​கள் விற்​கப்​படும் என்றும் பரத் ஷாவுக்கு குளோப் கேப்பிட்டல் ரிஸ்க் நிர்​வாகத் துறை​யிடம் இருந்து தகவல் வந்​தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பரத் ஷா, அந்த நிறு​வனத்​தின் உண்​மை​யான ஆவணங்​களை பதி​விறக்​கம் செய்​த​போது, தனக்கு அனுப்​பப்​பட்ட அனைத்து தகவல்​களும் பொய் எனத் தெரியவந்தது. இதையடுத்து பரத் ஷா மீத​முள்ள பங்​கு​களை விற்று ரூ.35 கோடி கடனை முழு​வது​மாக செலுத்​தி​னார். போலி ஆவணங்​களை காண்​பித்து 4 ஆண்​டு​களில் ரூ.35 கோடி மோசடி செய்​யப்​பட்​டது தொடர்​பாக மும்பை பொருளா​தார குற்​றப் பிரிவு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம் - மெட்டா ஏஐ</p></div>
சட்டப் போராட்டத்தில் வென்று மருத்துவரான 3 அடி உயர கணேஷ்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in