வாட்ஸ்அப் பயனர் தரவுகள் மெட்டா தளங்களில் பகிர்வு: ரூ.213 கோடி அபராத வழக்கில் டெக் நிறுவனம் வாதம்

வாட்ஸ்அப் பயனர் தரவுகள் மெட்டா தளங்களில் பகிர்வு: ரூ.213 கோடி அபராத வழக்கில் டெக் நிறுவனம் வாதம்
Updated on
1 min read

புதுடெல்லி: பயனர் தரவுகள் மெட்டா நிறுவனத்தின் மற்ற தளங்கள் உடன் பகிரப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மெட்டா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இந்த வாதத்தை முன்வைத்தார். அப்போது பயனர் தனியுரிமை கொள்கை சார்ந்த விவகாரத்தில் சட்ட விதிமீறல் எதுவும் இல்லை என அவர் கூறினார்.

வழக்கின் பின்னணி: வணிக நோக்கத்தில் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் பிற தளங்களுடன் பயனர்களின் தரவுகளை பகிர்வது தொடர்பான 2021 தனியுரிமை கொள்கைக்கு தடை விதித்தது இந்திய போட்டிகள் ஆணையம் (சிசிஐ). மேலும், வாட்ஸ்அப் தளத்துக்கு ரூ.213.14 கோடி அபராதம் விதித்தது. பயனர்கள் வாட்ஸ்அப் தளத்தை தொடர்ந்து பயன்படுத்த தங்களது தரவுகளை பகிர வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் சிசிஐ தெரிவித்தது.

இதை எதிர்த்து கடந்த ஆண்டு தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் (என்சிஎல்ஏடி) முறையிடப்பட்டது. பயனர்களிடத்தில் என்ன மாதிரியான தரவுகள், எதற்காக, எத்தனை காலம் என்பதை தெளிவுப்படுத்தும் வகையிலும், அந்த தேர்வை அவர்களிடத்தில் வழங்கும் வகையிலான சாய்ஸ் இருக்க வேண்டும். விளம்பரம் உள்ளிட்ட வணிக ரீதியான செயல்பாடுகள் பயனரின் அனுமதியுடன் மட்டும் மேற்கொள்ள முடியும் என்பதை கண்டறிந்ததாக என்சிஎல்ஏடி தெரிவித்தது. அந்த வாழிகாட்டுதலை பின்பற்றுவதாக வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிசிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மாதவி கோரடியா திவான், ‘‘பயனர்களின் தரவு பகிர்வில் பல்வேறு அம்சங்கள் அடங்கியுள்ளன. அதில் ஒன்றுதான் பிரைவசி மற்றும் தரவு பாதுகாப்பு. மற்றொன்று சந்தையையும் நுகர்வோரையும் தக்கவைத்தது. இது வித்தியாசமான ஒன்று’’ என தனது வாதத்தை வைத்தார்.

இந்நிலையில், வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்திய பயனரின் தனியுரிமையை மெட்டாவும், வாட்ஸ்அப் தளமும் மீறுவதை அனுமதிக்க முடியாது என்று எச்சரித்தனர். தனிப்பட்ட தரவுகளை பகிர்வது என்பது கண்ணியமான வழியில் களவாடும் செயல் என நீதிமன்றம் ஒப்பிட்டது. அப்போது பயனர்கள் தரவுகளை பகிர்வதில் இருந்து விலகலாம் என வாட்ஸ்அப் தெரிவித்த சூழலிலும் நீதிமன்றம் இதை தெரிவித்தது.

வாட்ஸ்அப் பயனர் தரவுகள் மெட்டா தளங்களில் பகிர்வு: ரூ.213 கோடி அபராத வழக்கில் டெக் நிறுவனம் வாதம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மே.இ.தீவுகள் மெகா வெற்றி: 254 ரன்கள் குவித்து சாதனை | T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in