தொழில் போட்டிக்கு ஒரு​போதும் அஞ்சவில்லை: எலான் மஸ்குக்கு ரிலையன்ஸ் பதில்

தொழில் போட்டிக்கு ஒரு​போதும் அஞ்சவில்லை: எலான் மஸ்குக்கு ரிலையன்ஸ் பதில்
Updated on: 
1 min read

மும்பை: தொழில் போட்​டிக்கு நாங்​கள் ஒரு​போதும் அஞ்ச மாட்டோம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரி​வித்​துள்​ளது. அமெரிக்​கா​வின் ஸ்டார்​லிங்க் நிறு​வனம் உலகின் பல்​வேறு நாடுகளில் செயற்​கைக்​கோள் இணைய சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறு​வனம் சார்​பில் இந்​தி​யா​வில் இணைய சேவை தொடங்க உரிமம் கோரி மத்​திய அரசிடம் விண்​ணப்​பம் அளிக்கப்​பட்டு உள்​ளது.

இதுதொடர்​பாக ஸ்டார்​லிங்க் நிறு​வனர் எலான் மஸ்க் சமூக வலை​தளத்​தில் அண்​மை​யில் வெளி​யிட்ட பதி​வில், “165 நாடுகளில் ஸ்டார்​லிங்க் நிறு​வனம் உரிமம் பெற்று உள்​ளது. ஆனால் இந்​தி​யா​வில் உரிமம் பெற 5 ஆண்​டு​களாக காத்​திருக்​கிறோம். அந்த நாட்​டின் உண்​மை​யான பிரதமர் முகேஷ் அம்​பானி. தொழில் போட்​டிக்கு அஞ்சி இந்​தி​யா​வில் ஸ்டார்​லிங்க் சேவையை தொடங்​க​வி​டா​மல் அவர் முட்​டுக்​கட்டை போட்டு வரு​கிறார்" என்று குற்​றம் சாட்​டி​னார்.

இதுகுறித்து முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ் நிறு​வனம் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளியிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ரிலை​யன்ஸ் நிறு​வனம் மற்​றும் இந்​திய சந்தை குறித்து அண்​மை​யில் வெளி​யான கருத்துகளுக்கு பதில் அளிக்க கடமைப்​பட்டு உள்​ளோம்.

நாங்​கள் உள்​நாட்​டில் தொடங்​கப்​பட்ட நிறு​வனம். முதலீடு​கள் மற்​றும் புதுமை கண்​டு​பிடிப்​பு​களை வரவேற்​கிறோம். உள்​நாட்​டிலும், வெளி​நாடு​களி​லும் மக்​களின் வாழ்க்​கைத் தரத்தை மேம்​படுத்த பாடு​படு​கிறோம்.

இந்​திய தொலைத்​தொடர்பு துறை நடுநிலை​யுடன் செயல்​படுகிறது. சட்ட விதி​களுக்கு உட்​பட்டே விண்​ணப்​பங்​கள் பரிசீலிக்கப்​படு​கின்றன என்று மத்​திய அரசு ஏற்​கெனவே விளக்கம் அளித்து உள்​ளது. இது ஒவ்​வொரு விண்ணப்பதாரருக்கும் பொருந்​தும். இதில் உள்​நாடு, வெளி​நாட்டு நிறு​வனம் என்ற பாகு​பாடு கிடையாது. ஜியோ​வின் செயற்கைக்கோள் இணைய சேவைக்​கான உரிமத்​தைப் பெற நாங்​களும் நீண்ட கால​மாக காத்திருக்கிறோம்.

நாங்கள் தொழில் போட்​டிக்கு ஒரு​போதும் அஞ்ச மாட்​டோம். கடந்த 2016-ல் இந்​திய தொலைத்​தொடர்பு சந்​தை​யில் கால் பதித்தோம். அப்​போது கடும் போட்​டி நிலவியது.

கடந்த 10 ஆண்டுகளில் 53 கோடி வாடிக்​கையாளர்​களைப் பெற்று உள்ளோம். உலக நாடு​களுடன் ஒப்​பிடும்​போது மிகக் குறைந்த விலை​யில் டேட்​டாவை வழங்கி வரு​கிறோம். செயற்​கைக்​கோள் இணைய சேவை​யில் ஸ்டார்​லிங்க் உள்​ளிட்ட நிறு​வனங்​களு​டன் ஆரோக்​கிய​மான போட்​டியை எதிர்​கொள்ள தயா​ராக உள்​ளோம். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்​ளது.

தொழில் போட்டிக்கு ஒரு​போதும் அஞ்சவில்லை: எலான் மஸ்குக்கு ரிலையன்ஸ் பதில்
தீபாவளியையொட்டி ரேஷன் கடைகளில் 21 பொருட்களுடன் இலவச மளிகை தொகுப்பு?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in