சீனாவுக்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்

சீனாவுக்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்
Updated on
1 min read

புதுடெல்லி: ​வாரத்​துக்கு 3 கோடி பேரல் கச்சா எண்​ணெய்க்கு மேல் இந்​தியா வாங்கி குவித்து வரு​வ​தாக ப்ளும்​பெர்க் செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் நில​வும் போர்ப் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் விநியோகம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த இக்கட்டான சூழலை சமாளிக்​கும் வகை​யில் ரஷ்​யா​விடம் இருந்து முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​தியா அதி​கள​வில் கச்சா எண்​ணெய்யை கொள்​முதல் செய்​யத் தொடங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து ப்ளும்​பெர்க் செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ள​தாவது: ரஷ்ய கச்சா எண்​ணெய்யை ஏற்​றிக் கொண்டு சீனா​வுக்​குச் சென்று கொண்​டிருந்த பிரம்​மாண்ட எண்​ணெய் கப்​பல் ஒன்​று, தென் சீனக் கடலில் திடீரென தனது பயணப் பாதையை மாற்​றிக் கொண்​டது.

தற்​போது அந்த கப்​பல் அதிவேக​மாக இந்​தி​யாவை நோக்கி சென்று கொண்​டிருக்​கிறது. இதே​போல் சீனா​வுக்​குச் செல்ல வேண்​டிய பல கப்​பல்​கள் மற்ற நாடு​களுக்​குத் திருப்பிவிடப்​படலாம் என்ற தகவல் வெளி​யாகி உள்​ளது.

ஒரே வாரத்​தில் ரஷ்​யா​விடம் இருந்து சுமார் 3 கோடி பேரல்​களுக்கு மேல் கச்சா எண்​ணெய்யை இந்​திய சுத்​தி​கரிப்பு நிறு​வனங்​கள் வாங்​கி​யுள்​ளன. ‘வோர்​டெக்​ஸா’ நிறுவன தரவு​களின்​படி, குறைந்தது 7 ரஷ்ய எண்​ணெய்க் கப்​பல்​கள் சீனா​வுக்​குப் பதில் இந்​தி​யா​வுக்​குத் தங்​கள் இலக்கை மாற்​றி​யுள்​ளன. கப்​பல் போக்குவரத்து தரவு​களின்​படி, ‘அக்வா டைட்​டன்’ என்ற கப்​பல் மார்ச் 21ம் தேதி நியூ மங்​களூரு துறை​முகத்தை வந்​தடை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அதேபோன்​று, கஜகஸ்​தானின் கச்சா எண்​ணெய்யை ஏற்​றிக் கொண்டு சீனா​வுக்​குச் செல்ல வேண்​டிய ‘ஜூஜூ என்’ என்ற கப்பலும் மார்ச் தொடக்​கத்​தில் தனது பாதையை மாற்றி மார்ச் 25ல் குஜ​ராத்​தின் சிக்கா துறை​முகத்தை வந்​தடை​யும் என தெரிகிறது. இவ்​வாறு ப்ளூம்​பெர்க் தெரி​வித்​துள்​ளது.

சீனாவுக்கு சென்று கொண்டிருந்த நிலையில் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்
போர்ச் சூழலிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in