​விழிஞ்சம் துறைமுகம் ஆக.18-ம் தேதி முதல் செயல்பட தொடங்கும்

​விழிஞ்சம் துறைமுகம் ஆக.18-ம் தேதி முதல் செயல்பட தொடங்கும்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் வி.டி. சதீசன் திருவனந்தபுரத்தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சம் சர்​வ​தேச துறைமுகத்தில் வரும் 18-ம் தேதி முதல் ஏற்​றும​தி, இறக்​குமதி நடவடிக்​கைகள் தொடங்​கும். துறை​முகத்​தின் செயல்​பாடு​கள் மூலம் மாநிலம் நேரடியாகப் பயனடைவதற்​கான முதல் நடவடிக்கை​யாக ஏற்​றும​தி-இறக்​குமதி சேவை​கள் தொடங்கப்படுகின்றன.

இதற்​கான நடவடிக்​கைகளைத் தொடங்​கு​வதற்​குத் தேவை​யான அறி​விப்​பு​களை சுங்​கத் துறை ஆணை​யரகம் வெளி​யிட்​டுள்​ளது. இவ்​வாறு முதல்​வர் சதீசன் கூறினார். இந்த துறைமுகத்தை அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் சோன் நிறு​வனம் நிர்வகிக்கும்.

​விழிஞ்சம் துறைமுகம் ஆக.18-ம் தேதி முதல் செயல்பட தொடங்கும்
“97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மை தேவை” - டி.ஆர்.பி.ராஜா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in