வெள்ளியின் சகாப்தம் இப்போதுதான் தொடங்குகிறது: வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தகவல்

வெள்ளியின் சகாப்தம் இப்போதுதான் தொடங்குகிறது: வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த ஜனவரி 1-ம் தேதி ஒரு கிலோ வெள்ளி விலை சுமார் 1 லட்​ச​மாக இருந்​தது. இப்​போது ரூ.2.45 லட்​ச​மாக அதி​கரித்​துள்​ளது.

இதுகுறித்து வேதாந்தா குழும தலை​வர் அனில் அகர்​வால் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் நேற்று கூறிய​தாவது: இந்த ஆண்​டு, வெள்ளி தனது உடன்​பிறந்த உன்னத உலோக​மான தங்​கத்​தின் நிழலில் இருந்து வெளி​யேறி உள்​ளது. வெள்​ளிக்கு இது ஒரு சிறப்​பான ஆண்​டாக அமைந்​தது.

வெள்​ளி​யின் விலை, டாலர் மதிப்​பில் இந்த ஆண்​டின் தொடக்​கத்​தில் இருந்து இது​வரை 125% உயர்​வைக் கண்​டுள்​ளது. தங்​கத்​தின் விலை​யும் இந்த ஆண்டு கணிச​மாக (63%) உயர்ந்த போதி​லும், வெள்ளி விலை உயர்​வுடன் ஒப்​பிடும்​போது பாதி அளவு​தான்.

வெள்​ளி​யின் சகாப்​தம் இப்​போது​தான் தொடங்​கு​கிறது. இது தனித்​து​வ​மானது. ஏனெனில் உள்​ளார்ந்த மதிப்​பை​யும் அதேசமயம் தொழில் துறை தேவையை​யும் கொண்ட ஒரே உலோகம் இதுவே ஆகும்.

சூரிய ஆற்​றல் மின்​கலங்​கள், மின்​சாரபேட்​டரி வாக​னங்​கள், ராணுவ தளவாடங்​கள் என புதிய தொழில்​நுட்​பங்​கள் எது​வாக இருந்​தா​லும், வெள்​ளியை ஒரு முக்​கிய மூலப்​பொருளாகப் பயன்​படுத்​துகின்​றன.

இந்​தி​யா​வின் ஒரே வெள்ளி உற்​பத்​தி​யாளர் என்ற முறை​யில் எங்​கள் குழு​மத்​தைச் சேர்ந்த இந்​துஸ்​தான் ஜிங்க் நிறு​வனத்​தில் இதை நாங்​கள் நேரடி​யாகக் கண்​டுள்​ளோம். வெள்​ளி​யின் விலை​யில் ஏற்ற இறக்​கம் இருக்​கலாம். ஆனால் வெள்​ளி​யின் அசா​தாரண பிர​காசம் நிலைத்​திருக்​கும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளியின் சகாப்தம் இப்போதுதான் தொடங்குகிறது: வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தகவல்
சவால்களைச் சமாளித்த பெண்கள் | கற்றதும் பெற்றதும் 2025

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in