வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றும​தியை கட்டுப்​பாட்​டில் வைத்திருக்க அமெரிக்கா திட்டம்

வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றும​தியை கட்டுப்​பாட்​டில் வைத்திருக்க அமெரிக்கா திட்டம்

Published on

வாஷிங்​டன்: வெனிசுலா​வில் கச்சா எண்​ணெய் கட்டமைப்பை நவீன​மாக்க அமெரிக்க எண்​ணெய் நிறுவனங்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் கேட்​டுக் கொண்டுள்​ளது. இந்​நிலை​யில் வெனிசுலா​வின் கச்சா எண்​ணெய் ஏற்​றும​தியை கட்​டுப்​பாட்​டில் வைத்திருப்போம் என அமெரிக்கா கூறி​யுள்​ளது.

இதுகுறித்து கருத்​தரங்கு ஒன்​றில் பேசிய அமெரிக்க எரிசக்தி துறை அமைச்​சர் கிரிஸ் ரைட் கூறும்போது, ``வெனிசுலா​வில் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்​கான தடை படிப்​படி​யாக நீக்​கப்படும். வெனிசுலா கச்சா எண்​ணெயை மீண்​டும் விற்​கப்​ போகிறோம். இந்த வருமானத்தை வெனிசுலா கணக்​கில் வரவு வைக்​ப்படும்.

இந்​தப் பணம் வெனிசுலா மக்​களுக்​காக பயன்​படுத்​தப்​படும். 2000-ம் ஆண்​டு​களில் அமெரிக்​கா​வின் எக்​ஸான் மொபில் கார்​பரேஷன், கோனோகோபிலிப்ஸ் மற்​றும் கம்​பெனிகளை வெனிசுலா​வின் முன்​னாள் அதிபர் ஹுகோ சாவேஸ் அரசுடைமை​யாக்​கி​னார்.

அந்த நிறு​வனங்​களுக்கு எல்​லாம் இழப்​பீடு அளிக்க வேண்​டி​யுள்​ளது. வெனிசுலா எண்​ணெய் விற்​பனை மூலம் முதலில் கிடைக்​கும் பணம், அமெரிக்க நிறு​வனங்​களுக்கு திருப்பி கொடுக்க பயன்​படுத்​தப்​ப​டாது. அது நீண்ட கால பிரச்​சினை” என்​றார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த செவ்​வாய்க்கிழமை அளித்த பேட்​டி​யில், ”அமெரிக்கா விற்​பனை செய்ய 5 கோடி பேரல் கச்சா எண்​ணெ்யை வெனிசுலா விடுவிக்​கும். இவற்​றின் தற்​போதைய சந்தை மதிப்பு 2.8 பில்​லியன் டாலர்” என்​றார்.

வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றும​தியை கட்டுப்​பாட்​டில் வைத்திருக்க அமெரிக்கா திட்டம்
அச்சத்துக்கு அப்பால்... அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in