வட்டியை குறைத்தது அமெரிக்க மத்திய வங்கி

ஒரே ஆண்டில் 3-வது முறையாக 0.25 சதவீதம் குறைப்பு
வட்டியை குறைத்தது அமெரிக்க மத்திய வங்கி
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் மத்​திய வங்​கி, வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்​துள்​ளது. அந்த நாட்​டில் ஒரே ஆண்​டில் 3-வது முறை​யாக வட்டி விகிதம் குறைக்​கப்​பட்​டிருக்​கிறது.

அமெரிக்க மத்​திய வங்​கி​யின் (எப்​இடி) உயர்​நிலை கூட்​டம் கடந்த இரு நாட்​களாக வாஷிங்​டனில் நடை​பெற்​றது. எப்​இடி தலை​வர் ஜெரோம் பாவெல், துணைத் தலை​வர் ஜெபர்​சன் மற்​றும் கவர்​னர்​கள் உட்பட 12 பேர் கூட்​டத்​தில் பங்​கேற்​றனர்.

இதில் விலை​வாசி உயர்​வு, வேலை​வாய்ப் ​பின்​மையை கருத்​தில் கொண்டு வட்டி விகிதத்தை குறைக்க எப்​இடி தலை​வர் ஜெரோம் உட்பட 9 பேர் ஆதரவு அளித்​தனர். 3 பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இறு​தி​யில் பெரும்​பான்மை உறுப்​பினர்​களின் ஆதர​வின்​படி வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்​கப்​பட்​டது.

இதுகுறித்து அமெரிக்க மத்​திய வங்​கி​யின் தலை​வர் ஜெரோம் பாவெல், வாஷிங்​டனில் நேற்று நிருபர்​களிடம் கூறும்​போது, “வேலை​வாய்ப்​பு​களை பெருக்​க​வும், அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலையை நிலைப்​படுத்​த​வும் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்​திருக்​கிறோம். இதன்​படி அமெரிக்க மத்​திய வங்கி​யின் வட்டி விகிதம் 3.50 சதவீதம் முதல் 3.75 சதவீதம் என்ற வரம்​பில் இருக்​கும்” என்றார்.

அமெரிக்​கா​வில் கடந்த செப்​டம்​பரில் வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்​கப்​பட்​டது. இதன்​பிறகு கடந்த நவம்​பரில் 0.50 சதவீதம் குறைக்​கப்​பட்​டது. தற்​போது 3-வது முறை​யாக வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்​கப்​பட்டு இருக்​கிறது. இந்த ஆண்​டில் மட்​டும் 3 முறை வட்டி விகிதம் குறைக்​கப்​பட்டு உள்​ளது.

இந்​தி​யா​வுக்கு சாதகம்: இதுதொடர்​பாக சர்​வ​தேச பொருளா​தார நிபுணர்​கள் கூறும்​போது, “அமெரிக்க மத்​திய வங்​கி​யின் வட்டி விகித குறைப்​பால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்திருக்கிறது. இது இந்​திய ரூபாய் உட்பட பல்​வேறு நாடுகளின் கரன்​சிகளுக்கு சாதக​மாக அமை​யும்.

தங்​கம், வெள்ளி விலை​யில் மாற்​றங்​கள் ஏற்​படும். அமெரிக்க மத்​திய வங்கி​யின் வட்டி குறைப்​பால் இந்​தியா உள்​ளிட்ட நாடு​களில் அந்நிய முதலீடு அதி​கரிக்​க வாய்ப்​பு இருக்​கிறது” என்​று தெரிவித்தனர்​.

வட்டியை குறைத்தது அமெரிக்க மத்திய வங்கி
ஷுப்மன் கில்லை முந்திய ஷேய் ஹோப்: 2025-ல் டாப் 5 பேட்டர்கள் யார் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in