உலக அளவில் யுபிஐ வசதி: நிதித் துறை செயலர் தகவல்

உலக அளவில் யுபிஐ வசதி: நிதித் துறை செயலர் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவில் யுனிபைட் பேமென்ட் இன்டர்பேஸ் (யுபிஐ) எனும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது.

அதன் பின்னர், நாடு முழுவதும் குக்கிராமங்களில் கூட யுபிஐ பணப் பரிவர்த்தனை சென்று சேர்ந்தது. தற்போது இந்தியாவின் யுபிஐ மூலம் பூடான், சிங்கப்பூர், கத்தார், மொரீசியஸ், நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட், இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய 8 நாடுகளில் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.

இந்நிலையில், உலகளாவிய ஒன்றிணைந்த நிதி மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய நிதித்துறை செயலர் எம்.நாகராஜு பேசும்போது, "இந்தியாவில் 50% அளவுக்கு யுபிஐ மூலமே பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்த வசதியை உலகளவில் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன" என்றார்.

உலக அளவில் யுபிஐ வசதி: நிதித் துறை செயலர் தகவல்
தனியார் மருந்து நிறுவனத்துக்கு எதிரான புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in