

புதுடெல்லி: நாட்டின் அஞ்சல் துறை சார்பில் ஏற்கெனவே ஸ்பீட் போஸ்ட் சேவை அமலில் உள்ளது.
இந்நிலையில் ஸ்பீட் போஸ்ட் 24, ஸ்பீட் போஸ்ட் 48 என்ற பெயரில் 2 புதிய சேவைகளை மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் பிச்சோர் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் கூறும்போது, ”இரண்டு புதிய சேவைகளில் குறிப்பிட்ட நேரத்துக்குள் தபால்கள் கொண்டு சேர்க்கப்படும். அதாவது ஸ்பீட் போஸ்ட் 24-ல் 24 மணி நேரத்துக்குள்ளாகவும், ஸ்பீட் போஸ்ட் 48-ல் 48 மணி நேரத்துக்குள்ளாகவும் தபால்கள் சென்று சேர்வது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உறுதி செய்யப்படும்.
இந்த புதிய சேவைகள் மூலம் விரைவான தபால் விநியோகத்தில் புதிய தரம் உருவாக்கப்படும்” என்று தெரிவி்த்தார்.