

புதுடெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கத்தால் எந்தெந்த பொருட்கள் மலிவாக கிடைக்கும், எந்தப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று பார்ப்போம்.
இந்த பட்ஜெட்டில் வரி விதிப்பு மற்றும் சலுகைகளின் எதிரொலியாக விலை குறையும் பொருட்கள்:
17 புற்றுநோய் மருந்துகள்
மின்சார வாகன பேட்டரிகள்
விளையாட்டு உபகரணங்கள்
சோலார் பேனல்கள்
ஸ்மார்ட் போன்கள்
தோல் உபகரணங்கள்
மைக்ரோவேவ் ஓவன்கள்
லித்தியம் பேட்டரி பாகங்கள்
சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள்
7 உயிர்காக்கும் மருந்துகள்
நீரிழிவு தொடர்பான மருந்துகள்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்
வெளிநாட்டு கல்வி
மதுபான கழிவுகள்
காலணி பாகங்கள் ஏற்றுமதி
மைக்ரோவேவ் ஓவன்
தோல் ஏற்றுமதி
பட்ஜெட் 2026: எவற்றின் விலை அதிகமாகும்?
சிகரெட்
பீடி
பான் மசாலா
குட்கா
இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள்
2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேநேரத்தில், 2025 வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போது, புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவை ஓர் உலகளாவிய உயிர்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யும் மையமாக மேம்படுத்துவதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் ‘பயோ பார்மா சக்தி’ திட்டம் முன்மொழியப்படுகிறது. இது உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அதற்கு இணையான மருந்துகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு ஏற்ற ஒரு சூழல் அமைப்பை உருவாக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.