

தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா
சென்னை: தமிழகத்தில் ஹ்வாஷின், சியோயான் ஆகிய தென்கொரிய வாகன உதிரி பாகத் தயாரிப்பு நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,370 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது என தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தில் ஹ்வாஷின் (Hwashin), சியோயான் (Seoyon) ஆகிய நிறுவனங்கள், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,370 கோடி புதிய முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இதன்மூலம் மாநிலத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை மீண்டும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முதல்வர் விஜய் தலைமையில் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பெறவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் ஏற்ற சூழலை உருவாக்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். அதேநேரம் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை வரவேற்கிறோம். இது இந்தியாவின் உற்பத்தித் திறனை மேலும் வலுப்படுத்தும்.
தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தை, இங்கு தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களே சிறப்பாக எடுத்துரைக்கின்றன. தொடர்ந்து முதலீடுகளைக் கொண்டு வருவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.