

தமிழகம் விரைவில் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் என்று நந்தம்பாக்கத்தில் நடந்து வரும் யுஇஎஃப் வர்த்தக உச்சி மாநாட்டில் அமைச்சர் டிஆர்பி.ராஜா உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஐக்கிய பொருளாதார மன்றத்தின் (யுஇஎஃப்) 3 நாள் வர்த்தக உச்சி மாநாடு, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழில் துறை நிறுவனங் கள், 6 ஆயிரம் பார்வையாளர்கள், 1,500 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
யுஇஎஃப் பிரெசிடென்ட் அகமது புஹாரி சேர்மன் நவாப் சாதா ஆசிப் அலி, ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஆகியோர் தலைமை தாங் கினர். மாநாட்டை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தொடங்கி வைத்து. 200 அரங்குகளுடன் கூடிய வணிக கண்காட்சியைப் பார்வை யிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதா ரத்தை தமிழகம் எட்டும் வகையில் 'உன்னத தமிழகம்' என்ற தொலை நோக்குப் பார்வை கொண்ட வரைவு திட்டத்தையும் வெளியிட்டார்.
மாநாட்டில் அவர் பேசியபோது, "இந்தியாவின் சராசரி பொருளா தார வளர்ச்சி 11%. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் வளர்ச்சி 10-11% ஆக உள்ளது. அதேநேரம், தமிழகம் 16% பொருளாதார வளர்ச் சியைப் பதிவுசெய்துள்ளது. நிர் ணயித்துள்ள 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி நாம் மிக வேகமாக பயணித்து வரு கிறோம். விரைவில் அதை எட்டு வோம்" என்றார்.
"வணிக வளர்ச்சிக்கு ஏற்ற மாநிலம் தமிழகம். புதிய சிந்தனை கொண்ட இளம் தலைமுறையினரையும் இதில் நாம் இணைத்துக் கொள்ள வேண் டும்" என்று மாநாட்டுக்கு தலைமை வகித்த நிர்வாகிகள் கூறினர். மாநாட் டில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
வளர்ச்சி அடைந்த தமிழகம்: மாநாட்டின் 2-வது நாள் நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் பங்கேற்றார். அவர் பேசும் போது, "சுதந்திரத்துக்குப் பிறகு தமிழ கம் மிகவும் பின் தங்கிய மாநிலமாக இருந்தது.75 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் வளர்ச்சி அடைந்த, சிறந்த மனிதவள மேலாண்மை கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது” என்றார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் பி.எஸ்.கிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், நவாஸ் கனி எம்.பி., ஐ.நா. நிலையான வளர்ச்சி கவுன்சில் (இந்தியா) தலைவர் அஜ்மல் தஸ்தகீர், பஹ்ரைன் நாட் டின் ஃபக்ரோ பிளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.முகமது அப் துல்லா அலி ஃபக்ரோ, கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாகத் தலைவர் ஜின்னா ரஃபிக் அகமது உள்ளிட்டோர் பங் கேற்றனர். இந்த மாநாடு இன்று நிறைவடைகிறது.