பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 3 சூரை மீன்கள் ரூ.75,000-க்கு விற்பனை

பாம்பன் நாட்டுப் படகு மீனவர் வலையில் சிக்கிய ராட்சத மூன்று மஞ்சள் சூரை மீன்கள்

பாம்பன் நாட்டுப் படகு மீனவர் வலையில் சிக்கிய ராட்சத மூன்று மஞ்சள் சூரை மீன்கள்

Updated on: 
1 min read

ராமேசுவரம்: பாம்பன் நாட்டுப் படகு மீனவர் வலையில் ராட்சத மஞ்சள் சூரை மீன்கள் மூன்று சிக்கின. இவை ரூ.75 ஆயிரம் விலைக்கு ஏலம் போயின.

தமிழக மீனவர்கள், இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்பகுதியில் பெரும்பாலும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட வகை மீன்களையே பிடிக்க பெருமளவில் ஆர்வம்காட்டி வருகின்றனர். ஆனால் ஆழ்கடல் மீன்பிடி முறையான சூரை மீன்களை பிடிப்பதற்கு முன்வருவதில்லை.

இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராமேசுவரம் அருகே பாக் நீரிணை கடற்பகுதியில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய பாம்பனைச் சேர்ந்த மீனவர் படகு ஒன்றில் மஞ்சள் சூரை மீன்கள் மூன்று சிக்கின. இதில் 100, 108 மற்றும் 112 கிலோ என ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு எடையில் இருந்தன. மொத்தமாக மீன்கள் 330 கிலோ இருந்தன.

சூரை மீன் குறித்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை மீனவர்கள் கூறும்போது, “சூரை மீன்கள் ஆழ்கடல் மீனித்தைச் சேர்ந்தவையாகும். சூரை மீன்களுக்கு செதிள் கிடையாது. சிறிய செவுள்கள் காணப்படும். வேகமாக நீந்தக் கூடிய சூரை மீன்களின் குடும்பத்தை மூன்று வகைகளாக பிரிக்கலாம். வரிச்சூரை (Frigate Tuna), மஞ்சள் துடுப்பு சூரை (Yellowfin Tuna), நீலத்துடுப்புச் சூரை (Bluefin Tuna) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

மஞ்சள் துடுப்புச் சூரை மீனுக்கு முதுகிலும், அடிப்புறத்திலும் அரிவாள் போன்ற துடுப்புகள் காணப்படும். நீள்வட்ட வடிவத்தில் இந்த மீன் அமைந்திருப்பதால் தரையில் உருட்டி விட்டால் உருளையைப் போல இது உருளக் கூடியது. மேலும் மஞ்சள் துடுப்பு சூரை மீனுக்கு சிறிய கண்கள் இருக்கும்.

வலையில் சிக்கிய மூன்று மீன்களும் மஞ்சள் வால் சூரை வகையை சேர்ந்தவை. இதனிடையே, மீன் வியாபாரி ஒருவர் கிலோ ரூ.230 வீதம் 3300 கிலோ மீன்களை ரூ.75,900-க்கு ஏலத்தில் எடுத்தார். மூன்று மீன்கள் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானதால் நாட்டுப் படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

<div class="paragraphs"><p>பாம்பன் நாட்டுப் படகு மீனவர் வலையில் சிக்கிய ராட்சத மூன்று மஞ்சள் சூரை மீன்கள்</p></div>
உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 3 நாளில் தொடங்க வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in