

புதுடெல்லி: டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஐரோப்பிய நாடான ருமேனியாவின் புகாரெஸ்டில் டிசிஎஸ் புதிய கிளையை திறந்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் திறன்களை வலுப்படுத்தவும், ஐரோப்பிய விநியோக வலையமைப்பை வலுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களில் 95% பேர் ருமேனியாவை சேர்ந்தவர்கள்.
புதிய புகாரெஸ்ட் அலுவலகம் டிசிஎஸ் நிறுவனத்தின் ஐரோப்பிய விநியோக வலையமைப்பின் ஒரு அங்கமாக அமையும், இது ஐரோப்பாவில் 20 நாடுகளில் 350-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க உதவுகிறது. இவ்வாறு டிசிஎஸ் தெரிவித்துள்ளது.