வைப்புத்தொகை வட்டியை உயர்த்தியது சுந்தரம் ஃபைனான்ஸ்

வைப்புத்தொகை வட்டியை உயர்த்தியது சுந்தரம் ஃபைனான்ஸ்
Updated on: 
1 min read

சென்னை: நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ், அக்டோபர் 16-ம் தேதி முதல் வைப்புத்தொகை (டெபாசிட்) மீதான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

ஒரு வருட கால வைப்புத் தொகைக்கான வட்டி 0.30%, 2 மற்றும் 3 வருட கால அளவுக்கான வைப்புத்தொகை மீதான வட்டி 0.25% உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, பொது மக்களுக்கான ஒரு ஆண்டு வைப்புத்தொகை வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.70% லிருந்து 7.00% ஆகவும் 2 ஆண்டுகள் கால அளவுக்கு 7.00% லிருந்து 7.25% ஆகவும், 3 ஆண்டுகளுக்கு 7.25% லிருந்து 7.50% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுபோல மூத்த குடிமக்களுக்கு ஒரு ஆண்டு கால அளவு உள்ள வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.20% லிருந்து 7.50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2 ஆண்டுகள் கால அளவுக்கு, இது 7.50% லிருந்து 7.75% ஆகவும், 3 ஆண்டுகளுக்கு 7.75% லிருந்து 8.00% ஆகவும் அதிகரிக்கப்பட் டுள்ளது.

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் தற்போது ரூ.6,088 கோடி வைப்புத்தொகையை கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்தின் மீது வைத்துள்ள தொடர்ச்சியான, வலுவான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், வைப்புத்தொகைகளுக் கான மிக உயர்ந்த பாதுகாப்பைக் குறிக்கும் வகையில், ICRA மற்றும் CRISIL ஆகிய இரு தரமதிப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தும் 'AAA Stable' என்ற உயரிய தரச்சான்றிதழை இந்நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வைப்புத்தொகை வட்டியை உயர்த்தியது சுந்தரம் ஃபைனான்ஸ்
துப்பாக்கிச் சூட்டில் தப்பினார் நடிகர் டைகர் ஷெராப் - நடந்தது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in