பங்குச்சந்தை வர்த்தகம்: சென்செக்ஸ் 1,225 புள்ளி உயர்வு

பங்குச்சந்தை வர்த்தகம்: சென்செக்ஸ் 1,225 புள்ளி உயர்வு
Updated on: 
1 min read

மும்பை: இந்​தி​யப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக ஏற்​றத்​துடன் நிறைவடைந்​தன. சென்செக்ஸ் 1,200 புள்​ளி​களுக்கு மேலும், நிஃப்டி 370 புள்​ளி​களுக்கு மேலும் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்​சி​யில் ஆழ்த்​தின.

இந்​திய பங்​குச் சந்​தைகள் கடந்த வியாழன், வெள்ளி, திங்​கள் ஆகிய 3 நாடகளாக தொடர்ந்து ஏறுமுக​மாக இருந்​தன. 4-வது நாளாக நேற்​றும் கணிச​மாக உயர்ந்​தன. மும்பை பங்​குச்​சந்​தைக் குறியீடான சென்​செக்ஸ், நேற்​றைய வர்த்​தக முடி​வில் 1,225 புள்ளிகள் (1.62%) உயர்ந்து 76,917.85 புள்​ளி​களில் நிறைவடைந்​தது. தேசிய பங்​குச்​சந்​தைக் குறியீ்டு நிஃப்டி 370 புள்​ளி​கள் (1.58%) உயர்ந்து 23,810.85 புள்​ளி​களில் நிலைகொண்​டது.

பொது​வாக நிப்​டி​யின் அனைத்து குறியீடுகளும் நேற்று உயர்வுடன் முடிந்​தன. நுகர்​வோர் சாதனங்​கள் மற்​றும் எப்.எம்.சி.ஜி. பங்​கு​கள் மீது முதலீட்​டாளர்​கள் காட்​டிய ஆர்​வம் காரண​மாக, ‘நிஃப்டி எப்.எம்.சி.ஜி.’ குறியீடு அதிக அளவாக 3.65% உயர்ந்​தது. நிறு​வனங்​கள் வெளி​யிட்டு வரும் 2-ம் காலாண்டு நிதி​நிலை முடிவு​கள் எதிர்​பார்த்​ததை விடச் சிறப்​பாக இருப்​பது, கச்சா எண்​ணெய் விலை குறைந்​தது உள்​ளிட்​டவை சந்தை உயர்வுக்கு காரண​மாக அமைந்​தது.

மேலும் சர்​வ​தேச அளவில் ஏ.ஐ. மற்​றும் தொழில்​நுட்​பப் பங்குகளிலிருந்து வெளியேறிய முதலீடுகள், இந்​தி​யப் பங்​குச்​சந்தை போன்ற பாரம்​பரியச் சந்​தைகளை நோக்​கித் திரும்பியதும் இந்த உயர்​வுக்கு முக்​கியக் காரண​மாக கூறப்படுகிறது.

பங்குச்சந்தை வர்த்தகம்: சென்செக்ஸ் 1,225 புள்ளி உயர்வு
மற்றவர் உரிமையைப் பறிப்பதாக போராட்டம் அமையக் கூடாது: உச்ச நீதிமன்றம்

X