பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு வட்டாரங்கள் உறுதி

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு வட்டாரங்கள் உறுதி
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையி​லான போர் நேற்று 7-வது நாளாக நீடித்​தது. இருதரப்பு போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து முடங்​கி​யிருக்​கிறது. இதன் எதிர்​விளை​வாக உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய்க்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்டு உள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய பெட்​ரோலியத் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினம், கர்​நாட​கா​வின் மங்​களூரு, படூர் பகுதி சேமிப்பு கிடங்​குகளில் போது​மான அளவு கச்சா எண்​ணெய் இருப்பு உள்​ளது. மேலும் இந்​திய பொதுத்​துறை, தனி​யார் நிறு​வனங்​களிட​மும் பெரு​மள​வில் கச்சா எண்​ணெய் இருப்புள்​ளது. இந்த கச்சா எண்​ணெய் மூலம் இந்​தி​யா​வின் பெட்​ரோல், டீசல் தேவையை 90 நாட்​கள் வரை பூர்த்தி செய்ய முடி​யும்.

போர் காரண​மாக வளைகுடா நாடு​களில் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்ய முடிய​வில்​லை. இதைத் தொடர்ந்து மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் சார்​பில் மாற்று வழிகள் கண்​டறியப்​பட்டு உள்​ளன. ரஷ்​யா​விடம் மீண்​டும் அதிகளவில் கச்சா எண்​ணெய் கொள்​முதல் செய்​யப்​படு​கிறது.

மேற்கு ஆப்​பிரிக்​கா​வில் உள்ள நைஜீரி​யா, அங்​கோலா, கானா உள்​ளிட்ட நாடு​களில் எண்​ணெய் வயல்​கள் உள்​ளன. இந்த நாடு​களில் இருந்​தும் அதிகளவில் கச்சா எண்​ணெய் இறக்​குமதியை தீவிரப்​படுத்தி உள்​ளோம். மேலும் லத்​தீன் அமெரிக்க நாடு​களில் இருந்​தும் இறக்​கும​தியை அதி​கரிக்க நடவடிக்கை எடுத்து வரு​கிறோம்.

சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகத்​தில் இருந்து குழாய் மூல​மாக செங்​கடல் பகு​திக்கு கச்சா எண்​ணெயை கொண்டு வந்​து, அங்​கிருந்து செங்​கடல், இந்​திய பெருங்​கடல் வழி​யாக சரக்கு கப்​பல்​களில் கச்சா எண்​ணெயை கொண்டு வர திட்​ட​மிட்டு உள்​ளோம்.

மத்​திய அரசின் மாற்​று​வழி திட்​டங்​களால் இந்​தி​யா​வில் பெட்​ரோல், டீசலுக்கு தட்​டுப்​பாடு ஏற்​ப​டாது. அவற்​றின் விலை​யும் உயராது. இவ்​வாறு பெட்​ரோலிய துறை வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு வட்டாரங்கள் உறுதி
“சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு” - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in