

புதுடெல்லி: இந்தியப் பங்குச்சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. உலோகம் மற்றும் எரிசக்தி துறை பங்குகள் விற்பனை மற்றும் சாதகமற்ற உள்நாட்டுக் காரணிகள் சந்தையின் வேகத்தைக் கட்டுப்படுத்தின.
வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 109 புள்ளிகள் உயர்ந்து 77,100 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் ‘நிஃப்டி’ 34 புள்ளிகள் உயர்ந்து 24,056-ஆகவும் நிலைத்தன. ஆசிய பங்குச் சந்தைகளும் கணிசமாக உயர்ந்தன.