

மும்பை: கிரீன்லாந்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்பு சர்வதேச சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளை அதிகளவில் விற்று வெளியேறி வருகின்றனர். நேற்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள் (1.28%) சரிந்து 82,180.47 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 353 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 25,232 புள்ளிகளில் நிலைபெற்றது.
எட்டர்னல், பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா, இன்டர்குளோப் ஏவியேஷன், டிரென்ட், ஏஷியன் பெயின்ட்ஸ் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. எச்டிஎப்சி வங்கிப் பங்கு மட்டும் ஏற்றம் கண்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டா ளர்களுக்கு ரூ.9.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.