இந்தூர் குடிநீர் மாசுபாடு விவகாரம்: விசாரணை குழு அமைத்தது ம.பி.

இந்தூர் குடிநீர் மாசுபாடு விவகாரம்: விசாரணை குழு அமைத்தது ம.பி.
Updated on
1 min read

போபால்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் பாகீரத்புரா பகுதியில் கடந்த மாதம் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்ததால் அப்பகுதி மக்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதில் 7 பேர் உயிரிழந்ததாக ம.பி. உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் நோய்த் தொற்றுக்குப் பிறகு உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு நிர்வாகம் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து விசாரிக்க பொது நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் குமார் சுக்லா தலைமையில் ம.பி. அரசு உயர் நிலை குழு அமைத்துள்ளது. இதில் பொது சுகாதாரப் பொறியியல் முதன்மைச் செயலாளர் பி.நர்ஹரி, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு இயக்குநரக ஆணையர் சங்கத் போதவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தூர் குடிநீர் மாசுபாடு விவகாரம்: விசாரணை குழு அமைத்தது ம.பி.
திமுக அழைத்ததும் கூட்டணி பேச்சு தொடங்கும்: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in