சென்செக்ஸ் 610 புள்ளி சரிவு: ரூ.7 லட்சம் கோடி இழப்பு

சென்செக்ஸ் 610 புள்ளி சரிவு: ரூ.7 லட்சம் கோடி இழப்பு
Updated on
1 min read

மும்பை: இந்​திய பங்​குச் சந்​தைகள் நேற்று கடுமையாக சரிந்தன.

குறிப்​பாக, முன்​னணி 50 நிறு​வனங்​களை உள்​ளடக்​கிய பிஎஸ்இ சென்​செக்ஸ் வர்த்​தகத்​தின்​போது 800 புள்​ளி​களுக்​கும் மேல் சரிந்​தது. நிப்டி 50 குறி​யீட்​டெண் 26,000 புள்​ளி​களுக்​கும் கீழ் சென்​றது. இருப்​பினும் வர்த்தக நேர இறு​தி​யில் சென்​செக்ஸ் 610 புள்​ளி​கள் சரிந்து 85,102-ல் நிலைத்​தது. நிப்டி 225 புள்​ளி​கள் குறைந்து 25,960 புள்​ளி​களில் நிலைகொண்​டது.

பிஎஸ்இ மிட்​கேப், ஸ்மால்​கேப் குறி​யீடு​கள் தலா 2% வரை வீழ்ச்சி கண்​டன. இதனால், நேற்று ஒரே நாளில் முதலீட்​டாளர்​களின் பங்கு மூலதன மதிப்பு ரூ.7 லட்​சம் கோடி அளவுக்கு சரிந்தது.

சென்செக்ஸ் 610 புள்ளி சரிவு: ரூ.7 லட்சம் கோடி இழப்பு
15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன முன்னாள் ராணுவ வீரர் வீடு திரும்பினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in