சென்செக்ஸ் 1,048 புள்ளி சரிவு: ரூ.7.8 லட்சம் கோடி இழப்பு

சென்செக்ஸ் 1,048 புள்ளி சரிவு: ரூ.7.8 லட்சம் கோடி இழப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடை​யில் போர் பதற்​றம் அதி​கரித்​துள்​ளதைத் தொடர்ந்​து, இந்​தி​யப் பங்குச்சந்​தைகள் நேற்று கடும் வீழ்ச்​சி​யைச் சந்​தித்​தன. வர்த்தகத் தொடக்​கத்​தில் சென்​செக்ஸ் 2,743 புள்​ளி​கள் சரிந்​து, 78,543.73 என்ற குறைந்​த​பட்ச அளவை எட்​டியது. அதே​போல், நிஃப்டி 519 புள்​ளி​கள் சரிந்து 24,659.25-ஆக வீழ்ச்சி கண்​டது.

வர்த்தக நேரத்​தின் பாதி​யில், சென்​செக்ஸ் ஓரளவு மீண்​டாலும் இறு​தி​யில் 1,048.34 புள்​ளி​கள் அல்​லது 1.29% சரிந்து 80,238.85-ல் நிறைவுற்​றது. நிஃப்டி 312.95 புள்​ளி​கள் அல்​லது 1.24% குறைந்து 24,865.70-ல் நிலைகொண்​டது. பங்​குச் சந்​தை​யில் ஏற்​பட்ட திடீர் வீழ்ச்​சி​யின் காரண​மாக முதலீட்​டாளர்​களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.7.8 லட்​சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்​பட்​டது.

மும்பை பங்​குச் சந்​தை​யில் பட்​டியலிடப்​பட்​டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.463.50 லட்​சம் கோடியி​ல் இருந்து ரூ.455.70 லட்​சம் கோடி​யாகக் குறைந்​தது. லார்​சன் & டூப்​ரோ, ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ், ஐசிஐசிஐ வங்​கி, மஹிந்​திரா & மஹிந்​தி​ரா, ஹெச்​டிஎஃப்சி வங்​கி, எடர்​னல் மற்​றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்​தியா ஆகியவை சந்தை வீழ்ச்​சி​யடைய முக்​கிய காரணங்​களாக அமைந்​தன.

சென்செக்ஸ் 1,048 புள்ளி சரிவு: ரூ.7.8 லட்சம் கோடி இழப்பு
என்சிஇஆர்டி சர்ச்சை: பாடத்திட்டத்தில் கவனம் தேவை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in