ஸ்டார்லிங்க், ஜியோ, ஒன்​வெப் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அனுமதி நிலுவை: மத்திய அரசு விளக்கம்

ஸ்டார்லிங்க், ஜியோ, ஒன்​வெப் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அனுமதி நிலுவை: மத்திய அரசு விளக்கம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: இந்​தி​யாவில் செயற்கைக்கோள் வழி இணை​யச் சேவை பெற அனுமதி கோரி மூன்று நிறு​வனங்​கள் விண்ணப்பித்துள்​ளன. அதில், எலான் மஸ்​கின் ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனமே கடைசி​யாக விண்​ணப்​பித்​த​தாகவும், பாது​காப்​புத் தொடர்​பான ஆவணங்​களைச் சமர்ப்​பித்​ததில் அதுவே கடைசி என்​றும் மத்​தியஅரசு வட்​டாரங்​கள் நேற்று தெரி​வித்​துள்​ளன.

இந்​தி​யாவில் ஸ்​டார்​லிங்க் சேவைக்கு சில தொழிலதிபர்​கள் முட்டுக்​கட்டை போடுவ​தாக எலான் மாஸ்க் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலை​யில், மத்​திய அரசு தரப்​பில் இந்தத் தகவல் வெளியாகி​யுள்​ளது. இணைய சேவைக்கு யார் வந்தாலும் இந்தியா வரவேற்கிறது என்று கூறப்பட்டுள்ளது. சேவை​யின் விலை, தரம் மற்​றும் மதிப்பு ஆகிய​வற்​றைக் கருத்தில் கொண்டு வாடிக்​கை​யாளர்​களே தங்​களுக்கு விருப்பமான நிறு​வனத்​தைத் தேர்ந்​தெடுப்​பார்​கள்.

ஜியோ, ஒன்​வெப் மற்​றும் ஸ்​டார்​லிங்க் ஆகிய மூன்று நிறுவனங்களில், ஸ்​டார்​லிங்க் தாமத​மாக விண்​ணப்​பித்து உரிமம் பெற்ற போதிலும், மூன்று நிறு​வனங்​களுக்​கும் உரிமங்கள் வழங்​கப்​பட்டு விட்​டன. இந்த விண்​ணப்ப செயல்​முறைகள் அனைத்​தும் முழு வெளிப்​படைத்​தன்​மையுடன் நடை​பெற்​றுள்​ளன. வணிகரீதி​யான சேவையைத் தொடங்​கு​வதற்கு முன்​பாக அனைத்து நிறு​வனங்​களும் தங்​கள் தொழில்​நுட்​பச் சாத்தி​யக்​கூறுகளை​யும் பாது​காப்பு விதி​களை​யும் பூர்த்தி செய்ய அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளன.

பார்தி ஏர்​டெல் ஆதரவு பெற்ற ‘ஒன்​வெப்’ நிறு​வனம் முதலிலும், ரிலை​யன்ஸ் நிறு​வனத்​தின் ‘ஜியோ’ இரண்​டாவ​தாகவும், மஸ்​கின் ‘ஸ்​டார்​லிங்க்’ மூன்​றாவ​தாகவும் பாது​காப்பு இணக்க ஆவணங்களைச் சமர்ப்​பித்​துள்​ளன. அலைக்​கற்றை ஒதுக்​கீடு மற்றும் அதன் விலை நிர்​ணயம் குறித்து மத்​திய அரசு இன்​னும் இறுதி முடிவு எடுக்​க​வில்லை. இந்த இரண்டு நிபந்​தனைகளும் பூர்த்தி செய்​யப்​பட்ட பிறகே சேவை​கள் முழு​மையாகத் தொடங்கப்​படும் என்​றும், அது ஒட்​டுமொத்​தத் துறைக்​கும் பயனளிக்​கும் என்​றும் தெரி​விக்​கப்​பட்​டுள்ளது.

ஸ்டார்லிங்க், ஜியோ, ஒன்​வெப் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அனுமதி நிலுவை: மத்திய அரசு விளக்கம்
புத்தகக் கொள்முதலில் பெரும் ஊழல்: அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க எழுத்தாளர் பெருமாள் முருகன் கோரிக்கை

X