சிஐஇஎல் மனிதவள நிறுவன வருவாய் ரூ.2,000 கோடி

சிஐஇஎல் மனிதவள நிறுவன வருவாய் ரூ.2,000 கோடி
Updated on
1 min read

சென்னை: ​நாட்​டின் முன்​னணி மனிதவள மற்​றும் பணி​யாளர் தீர்வு​களை வழங்கி வரும் சிஐஇஎல் ஹெச்​ஆர் நிறு​வனம், 2026ம் நிதி​யாண்​டில் மொத்த வரு​வா​யாக ரூ.1,984.6 கோடியை ஈட்டியுள்ளது. இதன் மூலம், அந்​நிறு​வனம் 32 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்​துள்​ளது.

இது குறித்து நிறு​வனத்​தின் நிர்​வாகத் தலை​வர் க.பாண்​டிய​ ராஜன் கூறிய​தாவது: பத்​தாண்​டுக்​குள் ரூ. 1,000 கோடி மதிப்பிலான மனிதவள நிறு​வன​மாக உயர வேண்​டும் என்ற இலக்​குடன் தொடங்​கப்​பட்ட சிஐஇஎல், தற்​போது தொழில்​ நுட்பம், ஏஐ உதவி​யுடன் அந்த மைல்​கல்லை 9 ஆண்​டு​களி​லேயே எட்​டிப் பிடித்​துள்​ளது.

தற்​போது அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள 2030-ம் ஆண்​டுக்​கான தொலை நோக்​குத் திட்​டத்​தின் மூலம், வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் ரூ. 6,000 கோடி வரு​வாயை ஈட்ட இலக்கு நிர்​ண​யித்​துள்​ளோம். தற்​போது நிறு​வனங்​கள் ஒருங்​கிணைந்த பணி​யாளர் மேலாண்மை முறையை நாடு​கின்​றன.

மாறிவரும் தொழில் சூழலுக்கு ஏற்ப நிறு​வனங்​களுக்​குத் தேவை​யான திறன் மற்​றும் தொழில்​நுட்​பத் தீர்​வு​களை வழங்​கும் முதன்​மைப் பங்​காளி​யாக சிஐஇஎல் உரு​வெடுத்​துள்​ளது. இவ்​வாறு பாண்​டிய ​ராஜன்​ கூறினார்​.

சிஐஇஎல் மனிதவள நிறுவன வருவாய் ரூ.2,000 கோடி
யார் இந்த அஸ்ரா கார்க்? - உளவுத் துறை ஐ.ஜி. பின்புலம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in