

தன்பாத்: அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கூறியதாவது: அடுத்த 6 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, துறைமுகம் உள்ளிட்ட துறைகளில் கணிசமான அளவில் அதானி குழுமம் முதலீடு செய்யவுள்ளது.
வளர்ச்சிக்கான வாய்ப்புள்ள துறைகளில் மட்டும் 6 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதல் ரூ.12 லட்சம் கோடியை அதானி குழுமம் முதலீடு செய்யும்.
இந்தியாவின் புதிய சுதந்திரத்தை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி சுயசார்பு திட்டத்தை முன்னெடுத்துள்ளார். அதற்கு ஏற்ற வகையில், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும், தொழிலதிபர்களும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இதற்காகத் தான் ஒவ்வொரு தொழிலதிபரும் பாடுபடுகிறார்கள். இவ்வாறு கவுதம் அதானி கூறினார்.
அதானி குழுமம் உலகின் மிகப்பெரிய ரினீவபிள் எனர்ஜி பூங்காவை குஜராத்தின் கவ்டாவில் 520 சதுர கி.மீ. பரப்பளவில் அமைத்துள்ளது. வரும் 2030-ல் இது செயல்பாட்டுக்கு வரும்போது 30 ஜிகா வாட் பசுமை எரிசக்தியை உற்பத்தி செய்யும்.