

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் நேற்று பங்கேற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மக்களை இணையதள யுகத்துடன் எங்கள் ஜியோ நிறுவனம் இணைத்தது.
அதுபோல இப்போது இந்தியாவை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) யுகத்துடன் ஜியோ இணைக்கும். செல்போன் மற்றும் இணைய தரவு கட்டணங்களை நாங்கள் எந்த அளவுக்கு குறைத்தோமோ அதுபோல செயற்கை நுண்ணறிவுத் திறனுக்கான செலவையும் வெகுவாக குறைப்போம்.
இதற்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடியை முதலீடு செய்யும். இது வெறும் ஊக முதலீடு அல்ல. தேசத்தை கட்டியெழுப்பும் மூலதனம். இந்தியாவின் ஏஐ மாற்றத்தில் ஜியோ இன்னும் பெரிய பங்கை வகிக்கும்.
இணைய வசதியை எப்படி தரம், நம்பகத்தன்மை மற்றும் மிகக் குறைந்த விலையில் மாற்றிய அமைத்தோமோ, அதேபோல இதையும் ஜியோ செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.