செமிகண்டக்டர் துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்த இந்தியா

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
செமிகண்டக்டர் துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்த இந்தியா
Updated on
1 min read

புதுடெல்லி: செமிகண்டக்டர் துறை​யில் ரூ.1 லட்​சம் கோடி முதலீடு​களை இந்​தியா ஈர்த்​துள்​ள​தாக மத்​திய அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்​ளார்.

நாட்​டின் செமிகண்​டக்​டர் துறை​யில் உலகளா​விய ஒத்​துழைப்​பு, முதலீடு, புத்​தாக்​கம், திறன் கட்​டமைப்பை மேம்​படுத்​து​வதுடன் முதலீட்​டாளர்​கள், ஆராய்ச்​சி​யாளர்​கள் மற்​றும் புத்​தாக்க நிறு​வனங்​களை ஒருங்​கிணைக்​கும் நோக்​கில் 5-வது ‘செமி​கான் இந்தியா 2026’ மாநாடு மற்​றும் கண்​காட்சி டெல்​லி​யில் நேற்று முன்​தினம் தொடங்​கியது.

இந்த மாநாட்டை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்​டில் மத்​திய மின்​னணு​வியல் மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் பேசி​ய​தாவது: கடந்த ஜூலை மாதம், மத்​திய அமைச்​சரவை ரூ.1,27,500 கோடி ஒதுக்​கீட்​டில் செமி​கான் 2.0 திட்​டத்​துக்கு ஒப்புதல் அளித்​தது. இது, உற்​பத்தி ஆலைகள் மற்​றும் பேக்​கேஜிங்கை தாண்​டி, பரந்த செமிகண்​டக்​டர் சூழலமைப்​பின் மீது கவனத்தை விரிவுபடுத்​துகிறது.

செமி​கான் 2.0 திட்​டம் அறிவிக்​கப்​பட்ட சில மாதங்​களி​லேயே, உலகளா​விய மற்​றும் உள்​ளூர் முதலீட்​டாளர்​களிட​மிருந்து ரூ.1 லட்சம் கோடி வரையி​லான முதலீட்டு வாக்​குறு​தி​களை இந்​தியா பெற்​றுள்​ளது. இது, சிப் தயாரிக்​கும் நாடாக மாறு​வதற்​கான அரசின் முயற்​சிகளில் ஏற்​பட்​டுள்ள ஒரு வேக​மான வளர்ச்​சி​யைக் குறிக்​கிறது. இந்த முதலீடு​கள் அடுத்த 2 அல்​லது 3 ஆண்​டு​களில் வரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. முந்​தைய செமி​கான் திட்டத்தின் கீழ் அங்​கீகரிக்​கப்​பட்ட மைக்​ரான் மற்​றும் முரு​கப்பா குழு​மத்​தின் சிப் பிரிவு போன்ற சில நிறு​வனங்​கள் ஏற்​க​னவே வணிக உற்​பத்​தி​யில் ஈடு​பட்​டுள்​ளன. இவ்​வாறு மத்திய அமைச்சர்​ பேசி​னார்​.

செமிகண்டக்டர் துறையில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்த இந்தியா
“இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்” - கட்சிப் பெயர், சின்னம் முடக்கத்துக்கு மம்தா கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in