மாமல்லபுரம் அருகே ‘ரூமி ட்வின்’ திட்டம்: ஒரு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

தொழில்நுட்பக் காரணங்களால் ரூமி-2 நிறுத்தம்
மாமல்லபுரம் அருகே ‘ரூமி ட்வின்’ திட்டம்: ஒரு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
Updated on: 
1 min read

மாமல்லபுரம்: ​மாமல்​லபுரம் அருகே திரு​விடந்தை கடற்​கரை​யில், ஸ்பேஸ் சோன் இந்​தியா மற்​றும் மார்ட்​டின் குழு​மம் இணைந்து உரு​வாக்​கிய ‘ரூமி ட்வின்’ இரட்டை ராக்​கெட் திட்​டத்​தில், ரூமி-1 ராக்​கெட் நேற்று காலை 7.40 மணிக்கு வெற்​றிகர​மாக விண்​ணில் ஏவப்​பட்​டது. தொழில்​நுட்​பக் காரணங்​களால் ரூமி-2 ராக்​கெட் ஏவப்​பட​வில்​லை. ​நிகழ்ச்​சி​யில் ஆளுநர் ராஜேந்​திர விஸ்​வ​நாத் அர்​லேகர் பங்​கேற்​றார்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், தையூரில் செயல்​பட்டு வரும் ‘ஸ்பேஸ்சோன் இந்​தியா’ நிறு​வனத்தை இளம் விஞ்​ஞானி ஆனந்த் மேகலிங்​கம் நடத்தி வரு​கிறார். தனி​யார் விண்​வெளித் தொழில்நுட்ப ஆராய்ச்​சி​யின் ஒரு பகு​தி​யாக, ஒரே திட்​டத்​தில் 2 ராக்​கெட்​டு​களை உரு​வாக்கி ஏவும் முயற்​சி​யாக ‘ரூமி ட்வின் மிஷன்’ வடிவ​மைக்​கப்​பட்​டது. இதற்​காக கடந்த 2 ஆண்​டு​களாக ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. சந்​திர​யான் திட்​டத்​தின் முன்னாள் இயக்​குநர் மயில்​சாமி அண்​ணாதுரை ஆலோசனைகளும் இந்த முயற்​சி​யில் இடம்​பெற்​றன.

இந்​தத் திட்​டத்​தின் கீழ் ரூமி-1, ரூமி-2 என இரண்டு ராக்​கெட்​டு​கள் உரு​வாக்​கப்​பட்​டன. ஹைபிரிட் உந்​து​விசைத் தொழில்​நுட்​பத்​தில் தயாரிக்​கப்​பட்ட இவை, மறு​தொடக்க இயக்க அமைப்​பை​யும் கொண்​டுள்​ளன. தலா 3.1 மீட்​டர் நீள​மும், 164 மில்​லி மீட்​டர் விட்டமும், 35 கிலோ எடை​யும் கொண்ட இந்த ராக்​கெட்​டு​கள், 100 செயற்​கைக்​கோள்​களைச் சுமந்து செல்​லும் வகை​யில் உருவாக்கப்​பட்​ட​தாகத் தெரிவிக்​கப்​பட்​டது.

இஸ்​ரோ​வின் அனு​ம​தி​யுடன் திரு​விடந்தை கடற்​கரை​யில் ஏவுதல் நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டது. மாமல்​லபுரம் அருகே கல்பாக்​கம் அணுமின் நிலை​யம் இருப்​ப​தைக் கருத்​தில் கொண்டு, பாது​காப்பு காரணங்​களுக்​காக ஏவுதளம் திருவிடந்தைக்கு மாற்​றப்​பட்​டது. ராக்​கெட்​டின் செயல்​பாடு​கள் ஈசிஆரில் உள்ள தனி​யார் வளாகத்​தில் கணினி மூலம் கண்காணிக்​கப்​பட்​டன. நிகழ்ச்​சி​யில் ஆளுநர் ராஜேந்​திர விஸ்வநாத் அர்​லேகர் கலந்​து​கொண்டு இளம் விஞ்​ஞானி ஆனந்த் மேகலிங்​கத்​துக்கு வாழ்த்து தெரி​வித்​தார்.

நிகழ்ச்​சி​யில் மயில்​சாமி அண்​ணாதுரை, மார்ட்​டின் குழும இயக்குநர்​கள் லீமா ரோஸ் மார்ட்​டின், ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின், இலங்கை முன்​னாள் அமைச்​சர் செந்​தில் தொண்​டை​மான் உள்ளிட்​டோர் பங்​கேற்​றனர். தமிழகம் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களில் இருந்து 2,000-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள், ஆசிரியர்​கள், கலந்து கொண்​டனர். தனி​யார் விண்​வெளி ஆராய்ச்​சி​யில் தமிழகத்​தின் பங்​களிப்பை முன்​னெடுத்​துச் செல்லும் முயற்​சி​யில், இரட்டை ராக்​கெட் திட்​டத்​தின் ரூமி-1 ராக்கெட் வெற்​றிகர​மாக ஏவப்​பட்​டது. தொழில்​நுட்​பக் காரணங்களால் ரூமி-2 ராக்​கெட் ஏவப்​பட​வில்​லை.

மாமல்லபுரம் அருகே ‘ரூமி ட்வின்’ திட்டம்: ஒரு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
ஆதிதிராவிடர் நல விடுதி நிதியில் முறைகேடு: தவறு செய்தவர்களை தண்டிக்க தவாக வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in