

புதுடெல்லி: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நேற்று வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் சில்லறைப் பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 6.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக ரிசர்வ் வங்கியின் உச்சபட்ச வரம்பான 6 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால், செப்டம்பரில் 7.74 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம் அக்டோபரில் 8.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில்லறைப் பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 5.54 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.