வணிகம்
கேரளாவில் உணவகங்கள் மூடல்: சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள உணவகங்கள் பெரும்பாலும் மேற்கு வங்கம், அசாம் தொழிலாளர்களை சார்ந்துள்ளன.
மேற்கு வங்கம், அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, தங்கள் பெயர் நீக்கப்படும் என கருதி பிஹார் மற்றும் அசாம் தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் சென்றனர்.
தற்போது சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கேரளாவில் பல உணவகங்கள் மூடப்பட்டுள்தால் வெளி மாநில தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இதனால் அவர்கள் அதிகளவில் சொந்த மாநிலங்களுக்கு திரும்புகின்றனர்.
