ரிலையன்ஸ் ரூ.95,754 கோடி லாபம் ஈட்டினாலும் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஊதியம் பெறாத அம்பானி

முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு ஆசி​ய போர் காரண​மாக, மார்ச் காலாண்டு சற்று மந்​த​மாக இருந்​த​து. ஆனாலும், 2025- 26 நிதி​யாண்​டில் ரிலையன்ஸ் குழு​மம் ரூ.95,754 கோடி லாபத்​தை​யும், ரூ.11.76 லட்சம் கோடி வரு​வாயை​யும் ஈட்​டி​யுள்​ளது.

ஆனாலும் ரிலை​யன்ஸ் குழு​ம தலை​வர் முகேஷ் அம்​பானி, தொடர்ந்து 6-வது ஆண்​டாக எவ்​வித சம்​பள​மும் பெற​வில்​லை. கரோனா பெருந்​தொற்று ஏற்​பட்​ட​தால், 2020- 21 நிதி​யாண்​டில் ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ் குழும தலை​வர் முகேஷ் அம்​பானி தனது ஊதி​யத்​தைத் தானாகவே முன்​வந்து துறந்​தார்.

2021- 22, 2022- 23, 2023- 24, 2024- 25 ஆகிய நிதி​ ஆண்​டு​களைத் தொடர்ந்​து, கடந்த 2025- 26 நிதி​யாண்​டிலும் அவர் இதே முடிவை எடுத்​துள்​ளார். தன் வசமுள்ள பங்​கு​களுக்​கான ஈவுத் ​தொகை (டிவிடெண்ட்) மட்​டுமே அவரது முக்​கிய வரு​வா​யாக உள்​ளது. சுமார் ரூ.9.6 லட்​சம் கோடி சொத்து மதிப்​புடன் உலகின் 21-வது கோடீஸ்​வர​ராக உள்ளார்.

கரோனா​ தொற்​றுக்கு முன்பே கூட, முகேஷ் 2008- 09 நிதி​யாண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்​டு​களுக்​கும் மேலாகத் தனது ஊதியத்தை ரூ.15 கோடி என்ற அளவில் தானாகவே முன்​வந்து வரம்​புக்​குள் வைத்​திருந்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

முகேஷ் அம்பானி
ஐ.நா. அமைதிப் படையில் உயிர்த் தியாகம் செய்த 2 இந்திய வீரர்களுக்கு உயரிய விருது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in