இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 18% ஆக குறைத்ததன் பின்னணி என்ன? - முழு விவரம்

பிற நாடுகளை விட இந்தியாவுக்கு குறைந்த வரியை நிர்ணயித்த அமெரிக்கா
இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 18% ஆக குறைத்ததன் பின்னணி என்ன? - முழு விவரம்
Updated on
2 min read

புதுடெல்லி: இந்​திய பொருட்​கள் மீதான வரி 50-லிருந்து 18% ஆக குறைக்​கப்​படும் என்று அமெரிக்க அரசு அறி​வித்து உள்​ளது. இந்​தி​யா​வின் ராஜதந்​திர நடவடிக்​கைகளால் அமெரிக்க அரசு திடீரென வரியை குறைத்​திருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்​திய பொருட்​கள் மீது அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்​தது. ஆனால் மத்​திய அரசு மிகுந்த நிதானத்தை கடைப்​பிடித்​தது. அதே​நேரம் அமெரிக்க சந்​தைக்கு மாற்​றாக புதிய சந்​தை​வாய்ப்​பு​களை இந்​தியா தேடியது.

இதன் விளை​வாக ஐரோப்​பிய நாடு​கள், தென்​அமெரிக்க நாடு​கள், ஆப்​பிரிக்க நாடு​கள், மத்​திய கிழக்கு நாடு​களுக்கு இந்​திய பொருட்​களின் ஏற்​றுமதி கணிச​மாக அதி​கரித்​தது. உள்​நாட்​டில் ஜிஎஸ்டி வரி குறைக்​கப்​பட்​டது. இதனால் உள்​நாட்டு வணி​கம் கணிச​மாக அதி​கரித்​தது.

கடந்த ஜூலை​யில் இந்​தி​யா, பிரிட்​டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்​பரில் நியூசிலாந்​து, ஓமன் நாடுகளு​டன் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்தை இந்​தியா ஏற்​படுத்​தி​யது.

கடந்த ஜனவரி 27ம் தேதி 27 நாடு​கள் அடங்​கிய ஐரோப்​பிய ஒன்​றி​யத்​துடன் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தியா கையெழுத்​திட்​டது. இது, அனைத்து ஒப்​பந்​தங்​களின் தாய் என்று வர்​ணிக்​கப்​பட்​டது.

இந்​தி​யா, ஐரோப்​பிய ஒன்​றி​யம் இடையி​லான ஒப்​பந்​தம் அமெரிக்​கா​வில் பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. கிரீன்​லாந்து விவ​காரத்​தில் ஐரோப்​பிய நாடு​கள் மீது கூடு​தல் வரி விதிப்​பேன் என்று அதிபர் ட்ரம்ப் மிரட்​டல் விடுத்து வந்​தார். ஆனால் இந்​தி​யா​வுடன் ஐரோப்​பிய ஒன்​றி​யம் ஒப்​பந்​தம் மேற்​கொண்ட உடன் தனது நிலைப்​பாட்டை அதிபர் ட்ரம்ப் மாற்​றி​னார்.

ஐரோப்​பிய நாடு​களு​டன் இணக்​க​மான அணுகு​முறையை கடைப்​பிடித்​தார். அதே​நேரம் இந்​தி​யா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய அமெரிக்க அரசு தீவிரம் காட்​டியது.

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறிய​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் திங்​கள்​கிழமை தொலைபேசி​யில் பேசினேன். ரஷ்யா உக்​ரைன் போர் உட்பட பல்​வேறு விவ​காரங்​கள் குறித்து இரு​வரும் விவா​தித்​தோம். ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்​திக் கொள்ள பிரதமர் மோடி சம்​மதம் தெரி​வித்​தார்.

இனிமேல் அமெரிக்​கா​விடம் இருந்து அதிக கச்சா எண்​ணெயை இந்​தியா வாங்​கும். வெனிசுலா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வது குறித்​தும் நாங்​கள் ஆலோ​சித்​தோம். இந்த நடவடிக்​கைகள் உக்​ரைன் போரை நிறுத்த உதவி செய்​யும்.

500 பில்​லியன் டாலர்: பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் எனக்கு நட்​புறவு நீடிக்​கிறது. அவர் மீது மிகுந்த மரி​யாதை வைத்​துள்​ளேன். அமெரிக்​கா, இந்​தியா இடையே வர்த்தக ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய நாங்​கள் ஒப்​புக் கொண்​டோம். இதன்​படி இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அரசு இனிமேல் 18 சதவீத வரியை மட்​டுமே விதிக்​கும். அமெரிக்​கா​விடம் இருந்து 500 பில்​லியன் டாலர் மதிப்​பிலான எரிசக்​தி, தொழில்​நுட்​பம், வேளாண் விளைபொருட்​கள், நிலக்​கரி மற்​றும் இதர பொருட்​களை வாங்க இந்​தியா ஒப்​புக்கொண்​டிருக்​கிறது. அமெரிக்​கா, இந்​தியா இடையி​லான உறவு மேலும் வலு​வடை​யும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் மோடி நன்றி: பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறிய​தாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்​புடன் திங்​கள்​கிழமை தொலைபேசி​யில் பேசினேன். இந்​திய பொருட்​களுக்கு 18 சதவீத வரி விதிக்​கப்​படும் என்று அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இதற்​காக 140 கோடி இந்​தி​யர்​களின் சார்​பில் அவருக்கு நன்​றியை தெரி​வித்து கொள்​கிறேன்.

இரு பெரும் பொருளா​தார நாடு​கள், இரு பெரும் ஜனநாயக நாடு​கள் ஒன்​றிணைந்து செயல்​பட்​டால் இரு நாடு​களின் மக்​கள் பலன் அடை​வார்​கள். உலகின் அமை​தி, ஸ்திரத்​தன்​மை, செழிப்​புக்கு அதிபர் ட்ரம்​பின் சீரிய தலைமை அவசி​ய​மாகிறது.அவரது அமைதி முயற்​சிகளுக்கு இந்​தியா முழு ஆதரவு அளிக்​கும்​. அவருடன் இணைந்​து செயல்​படு​வேன். இவ்​வாறு பிரதமர்​ நரேந்திர மோடி தெரிவித்​துள்​ளார்​.

இந்திய பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 18% ஆக குறைத்ததன் பின்னணி என்ன? - முழு விவரம்
இந்தியாவுடன் அமெரிக்கா மிகச்சிறந்த ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in