இந்தியாவுடன் அமெரிக்கா மிகச்சிறந்த ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

இந்தியாவுடன் அமெரிக்கா மிகச்சிறந்த ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தி​யா​வுடன் அமெரிக்கா மேற்​கொண்​டுள்ள வர்த்தக ஒப்​பந்​தம் நமது அண்டை நாடு​களை விட மிகச் சிறப்​பான முறை​யில் அமைந்​துள்​ள​தாக மத்​திய வர்த்தக மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​துள்​ளார்.

எனவே, இந்த விவ​காரத்​தில் ராகுல் காந்தி உள்​ளிட்ட எதிர்க்​கட்​சித் தலை​வர்​களின் விமர்​சனங்​களுக்கு அவர் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து நேற்று டெல்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் பியூஷ் கோயல் கூறிய​தாவது: பல மாத மற்​றும் பல கட்ட பேச்​சு​வார்த்​தைகளுக்​குப் பிறகு அமெரிக்கா​வுடன் வரலாற்​றுச் சிறப்​புமிக்க ஒப்​பந்​தத்தை இந்​தியா மேற்​கொண்​டுள்​ளது. அமெரிக்கா​வுட​னான இந்த வர்த்தக ஒப்​பந்​தம் அண்டை நாடு​களு​டன் ஒப்​பிடு​கை​யில் இந்​தி​யா​வுக்​குக் கிடைத்​துள்ள மிகப் பெரிய வெற்​றி​யாகும்.

ஆனால், ராகுல் காந்தி இந்த விவ​காரத்​தில் மக்​களை திசை​திருப்​பும் வகை​யில் செயல்பட முயற்​சிக்​கிறார். நாட்​டின் முன்​னேற்​றத்​தில் அவருக்கு அக்​கறை இல்​லை. இந்​தி​யா​வின் வளர்ச்​சியை கண்டு ராகுல் காந்தி ஏன் எரிச்​சலடைகிறார்? தனது எதிர்​மறை​யான மனப்​போக்​கின் மூலம் எதைச் சாதிக்க விரும்​பு​கிறார் என்​பதை நாட்டு மக்​களுக்கு அவர் தெளிவுபடுத்த வேண்​டும்.

முதலில் அறி​வித்​தது ஏன்? - இந்த ஒப்​பந்​தத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏன் முதலில் அறி​வித்​தார் என்று எதிர்க்​கட்​சி​யினர் கேள்​வியெழுப்​பு​கின்​றனர். இந்​தியா மீது கூடு​தல் இறக்​குமதி வரி​களை விதித்​ததே அமெரிக்​கா​தான். எனவே, அந்த வரிக் குறைப்பு குறித்த அறி​விப்பை அவர்​கள்​தான் முதலில் வெளி​யிட வேண்​டும் என்​பது​தானே முறை. எனவே, அதில் எந்​தத் தவறும் இல்​லை.

இந்த ஒப்​பந்​தம் விவ​சா​யம் மற்​றும் பால் பண்ணை துறை​களின் நலன்​களை முழு​மை​யாகப் பாது​காக்​கும். அதே​போல், ஜவுளி, ஆபரணங்​கள், வாகன உதிரி​பாகங்​கள் மற்​றும் சிறு, குறு, நடுத்தர தொழில்​கள் சார்ந்த பொருட்​களுக்கு அமெரிக்க சந்​தை​யில் புதிய வாய்ப்​பு​களை உரு​வாக்​கும். இவ்​வாறு பியூஷ் கோயல்​ தெரி​வித்​தார்​.

இந்தியாவுடன் அமெரிக்கா மிகச்சிறந்த ஒப்பந்தம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்: விவாதம் நடத்தக்கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in