கோப்புப்படம்

கோப்புப்படம்

பேண்​டேஜ் துணி உற்​பத்​திக்கு தொழில் பூங்கா நிறுவ ராஜபாளையம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

Published on

ராஜ​பாளை​யம்: பேண்​டேஜ் எனப்​படும் மருத்​து​வத் துணி உற்​பத்​தி​யில் உலக அளவில் இந்​தியா முன்​னணி​யில் உள்​ளது. சீனா 2-ம் இடத்​தில் உள்​ளது. இந்​தி​யா​வைப் பொருத்​தவரை தமிழகத்​தின் விருதுநகர் மாவட்​டம் ராஜ​பாளை​யம் பேண்​டேஜ் துணி உற்​பத்​தி​யில் முன்​னிலை வகிக்கிறது.

இப்​பகு​தி​யில் 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட சிறு விசைத்​தறி கூடங்​களும்​,50-க்​கும் மேற்​பட்ட பெரிய நூற்​பாலைகளும் உள்​ளன. இதில் பெரும்​பாலான விசைத்​தறிகள் 5 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட குடும்​பங்​களால் குடிசைத் தொழிலாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. ராஜ​பாளை​யம் பகு​தி​யில் தினசரி ரூ.2 கோடி அளவுக்கு பேண்​டேஜ் துணி நெசவு செய்​யப்​படு​கிறது.

இதில் விசைத்​தறி தொழிலா​ளர்​கள், சிறு விசைத்​தறி உரிமை​யாளர்​கள், மருத்​து​வத் துணி உற்​பத்​தி​யாளர்​கள், மருத்​து​வத் துணி ஏற்​றும​தி​யாளர்​கள் என 4 படிநிலைகள் உள்​ளன. பேண்​டேஜ் துணி உற்​பத்​தி​யில் தொழிலா​ளர்​களை​விட சிறு விசைத்​தறி உரிமை​யாளர்​களே அதி​கம் உள்​ளனர். இவர்​கள் மருத்​து​வத் துணி உற்​பத்​தி​யாளர்​களிட​மிருந்து நூலை பெற்று நெசவு செய்து கொடுக்​கின்​றனர். அதன்​பின் அந்த துணி சைசிங் செய்​யப்​பட்டு மருத்​துவ துணி​யாக மாற்​றப்​பட்டு வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​யப்​படு​கிறது.

ஜிஎஸ்டி வரி அமல்​படுத்​தப்​பட்​ட​போது நூல் 5% வரி அடுக்​கிலும், நெசவு செய்த பேண்​டேஜ் துணி 12% வரி அடுக்​கிலும் இருந்​த​தால், ஜிஎஸ்டி ரிட்​டர்ன் எடுப்​பது உள்​ளிட்ட பல்​வேறு சிக்​கல் நிலவியது. இந்​நிலை​யில் ஜிஎஸ்டி வரி சீரமைப்​பில் வரி விதிப்பு இரு அடுக்​கு​களாக குறைக்​கப்​பட்​ட​தால், பேண்​டேஜ் துணி, நூல் ஆகிய இரண்​டும் 5% வரி அடுக்​கில் கொண்டு வரப்​பட்ட​தால் உற்​பத்​தி​யாளர்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

இதுகுறித்து பேண்​டேஜ் உற்​பத்​தி​யாளர்​கள் கூறிய​தாவது:

நூல் தட்​டுப்​பாடு, மாசு கட்​டுப்​பாட்டு விதி​கள், மின் கட்டண உயர்வு உள்​ளிட்ட பல்​வேறு பிரச்​சினை​களால் பேண்​டேஜ் உற்​பத்தி சரிவை சந்​தித்​துள்​ளது. மேலும் பேண்​டேஜ் துணி ஏற்​றும​திக்​கான ஊக்​கத்​தொகை நிறுத்​தப்​பட்​ட​தால் சிறு உற்​பத்​தி​யாளர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

எனவே, தமிழக அரசு மின் கட்​ட​ணத்​தைக் குறைக்​க​வும், மத்​திய அரசு பேண்​டேஜ் ஏற்​றும​திக்​கான ஊக்​கத் தொகையை மீண்​டும் வழங்​க​வும் நடவடிக்கை எடுத்​தால் பேண்​டேஜ் தொழில் புத்​துணர்ச்சி பெறும். பேண்​டேஜ் உற்​பத்​தி​யில் பல்​வேறு படிநிலைகள் உள்​ள​தால் 3 இடங்​களில் பணி​கள் நடை​பெறு​வ​தால் போக்​கு​வரத்து செலவு அதி​க​மாக உள்​ளது.

இதைத் தவிர்க்​க​வும் அனைத்து உற்​பத்தி படிநிலைகளை​யும் ஒரே இடத்​தில் செய்ய ஏது​வாக, ராஜ​பாளை​யம் பகு​தி​யில் மருத்​து​வத் துணி உற்​பத்​திக்​கான தனி தொழில் பூங்கா அமைக்க மத்​திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர்கள் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம் </p></div>
ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500% வரி விதிப்பு - மசோ​தாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்​புதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in