

மும்பை: ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் வருமாறு: கடந்த 2020-21 நிதி யாண்டில் பொதுத் துறை வங்கிகள் ஒட்டுமொத்த அளவில் அதிகபட்சமாக ரூ.1.33 லட்சம் கோடியை வாராக் கடனாக அறிவித்தன.
இது, 2021-22-ல் 1.16 லட்சம் கோடியாக குறைந்து பின்னர் 2022-23-ல் ரூ.1.27 லட்சம் கோடியாக உயர்ந்தது.வாராக் கடன் பிரிவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுத் துறை வங்கிகள் ரூ.1.65 லட்சம் கோடியை மட்டுமே மீட்டெடுத்துள்ளன.
இந்நிலையில், 2025 செப்டம்பர் நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.6.15 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.