அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தத்​தினை ஏற்​படுத்​து​வதற்​காக அமெரிக்கா​வுடன் இந்​தியா நடத்தி வரும் பேச்​சு​வார்த்​தை​யில் நல்ல முன்​னேற்​றம் ஏற்​பட்​டுள்​ள​தாக மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் நேற்று தெரி​வித்​தார்.

வர்த்தக ஒப்​பந்த பேச்​சு​வார்த்​தையை மேற்​கொள்​வதற்​காக அமெரிக்க பிர​தி​நிதி ரிக் ஸ்விட்​சர் அண்​மை​யில் தனது குழு​வினருடன் இந்​தியா வந்​தார். இரண்டு நாட்​கள் நடை​பெற்ற இந்த பேச்​சு​வார்த்தை டிசம்​பர் 11-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது.

இந்த நிலை​யில் பியூஷ் கோயல் அதுகுறித்து கூறுகை​யில், “அமெரிக்கா​வுட​னான எங்​களின் பேச்​சு​வார்த்தை மேம்​பட்ட நிலை​யில் உள்​ளது. ‘‘பைவ் ஐஸ்’’ (எப்​விஇஒய்) கூட்​ட​ணி​யின் மூன்று உறுப்​பினர்​களான ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்து மற்​றும் நியூசிலாந்து ஆகிய நாடு​களு​டன் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தங்​களை இந்​தியா இறுதி செய்​துள்​ளது. கனடாவுட​னும் விரை​வில் விதி​முறை​கள் குறித்த பேச்​சு​வார்த்​தைகளைத் தொடங்க உள்​ளோம். உலக புவி​சார் அரசி​யலில் இந்​தி​யா​வின் வளர்ந்து வரும் முக்​கி​யத்​து​வத்தை இது பிர​திபலிக்​கிறது’’ என்​றார்.

உளவுத் தகவல்​களை பகிர்ந்து கொள்​ளும் வலை​யமைப்​பில் ஆஸ்​திரேலி​யா, கனடா, நியூசிலாந்​து, இங்​கிலாந்து மற்​றும் அமெரிக்கா ஆகியவை உள்​ளன.

கடந்த பிப்​ர​வரி மாதம், இரு நாடு​களின் தலை​வர்​களும் வர்த்தக ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்​து​வதற்​கான பேச்​சு​வார்த்​தையை நடத்​து​மாறு அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டனர். இது​வரை ஆறு சுற்​றுப் பேச்​சு​வார்த்​தைகள் நடத்​தப்​பட்​டுள்​ளன. தற்​போதைய 191 பில்​லியன் அமெரிக்க டாலர்​களாக உள்ள இருதரப்பு வர்த்​தகத்​தை, 2030-ஆம் ஆண்​டிற்​குள் 500 பில்​லியன் டாலர்​களாக அதி​கரிப்​பதை முக்​கிய நோக்​க​மாகக் கொண்டு இந்த பேச்​சு​வார்த்தை நடை​பெறுகிறது.

அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
பாஜக பெற்ற நன்கொடை: 2024-25 நிதியாண்டில் ரூ.6,655 கோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in