கறிக்கோழி பண்ணைகளில் உற்பத்தி நிறுத்தம்: திருப்பூர், கோவையில் போராட்டம் தீவிரம்

திருப்பூர் அருகே அல்லாளபுரத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் போராட்டத் தால் கோழிகள் இல்லாமல் காணப்பட்ட பண்ணை.

திருப்பூர் அருகே அல்லாளபுரத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் போராட்டத் தால் கோழிகள் இல்லாமல் காணப்பட்ட பண்ணை.

Updated on
2 min read

திருப்பூர்: கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தொடங்கி யுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதில், திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

கறிக்கோழி வளர்ப்புக் கூலியை உயர்த்தித்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் உற்பத்தி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் கறிக்கோழி விவசாய பண்ணை அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.பி.டி.மகாலிங்கம் கூறிய தாவது: போதிய விலை கிடைக் காத சூழலில், இன்றைக்கு உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தொடங்கி உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிர மடைந்துள்ளது. கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 உயர்த்தி தந்தால் மட்டுமே, கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்பெற முடியும். கறிக்கோழிக்கு தேவையான உற்பத்திப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக தற்போது இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 2 வாரங்களாக கோழிக்குஞ்சுகளை, பண்ணைகளில் விவசாயிகள் இறக்குவதில்லை. இந்த போராட்டத்தின் காரணமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான பண்ணைகள் காலியாக உள்ளன. உற்பத்தி பாதிப்பு ஏற்படும் போது, நிச்சயம் சந்தையில் விலை ஏற்றம் இருக்கும். இன்னும் 2 வாரங்களில் இந்த பிரச்சினை பெரிதாக இருக்கும். ஏனென்றால் இன்றைக்கு ஆயிரக்கணக் கிலான பண்ணைகள் போராட்டத்தில் பங்கெடுத் துள்ளன.

கோழிக்குஞ்சுகளை பண்ணையில் இறக்கி 7 வாரங்கள் வரை வளர்த்து, நிறுவனங்களுக்கு ஒப்படைப்போம். ஏற்கெனவே கார்த்திகை, மார்கழி மாதங்களில் முட்டை, மீன், கோழி உள்ளிட்ட இறைச்சிகளின் விலை குறையவில்லை. தற்போதைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உடனடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, பண்ணை உற்பத்தியாளர்களின் கோரிக் கையை நிறைவேற்ற வேண்டும்.

கறிக்கோழிகள் கிலோவுக்கு ரூ.20 ஆகவும், 5 மாதங்கள் வளர்க்க வேண்டிய நாட்டுக் கோழிக்கு ரூ.15-ல் இருந்து ரூ.25 ஆகவும், காடை ஒன்றுக்கு ரூ.3 என வழங்கப்படுவதை, ரூ.7 ஆகவும் உயர்த்தித்தர வேண்டும்.கறிக் கோழி பண்ணை விவசாயிகளுக்கும், நிறுவனங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில், ஒப்பந்த பாது காப்புச் சட்ட அரசாணை வெளியிட்டு அமல்படுத்த தேவையான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும், என்றார்.

பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு (பிசிசி) தலைவர் ஸ்வாதி கண்ணன் சின்னசாமி கூறும்போது, “இந்த போராட்டத்தின் பாதிப்பு, 40 நாட்களுக்கு பிறகே தெரியவரும். தற்போதைய நிலையில் நிறுவனங்கள் அவரவர் தேவைக்கேற்ப விலையை உயர்த்தி வாங்கிக் கொள்ளலாம். அது அவர்களின் விருப்பம்.

அதில் பிசிசி தலையிட முடியாது. தற்போதைய நிலையில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7.50 வழங்கப்படுகிறது. அவர்களின் மற்ற கோரிக்கைகளான நாட்டுக்கோழி மற்றும் காடை விலை நிர்ணயம் எங்களுக்கு பொருந்தாது” என்றார்.

<div class="paragraphs"><p>திருப்பூர் அருகே அல்லாளபுரத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் போராட்டத் தால் கோழிகள் இல்லாமல் காணப்பட்ட பண்ணை.</p></div>
மணிமுத்தாறு, குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு - மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in