வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.2,983-க்கு விற்பனை

வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.2,983-க்கு விற்பனை
Updated on: 
1 min read

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை சென்னையில் ரூ.66.50 என உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் ஒன்று ரூ.2,983-க்கு விற்பனை ஆகிறது.

சர்​வ​தேச சந்தை விலை நில​வரத்​துக்கு ஏற்ப சமையல் எரி​வாயு (எல்​பிஜி) சிலிண்​டர் விலை மாதந்​தோறும் 1-ம் தேதி மாற்றி அமைக்​கப்​படு​கிறது. எனினும், மதிப்​புக் கூட்டு வரி போன்ற உள்ளூர் வரி​களைப் பொறுத்து மாநிலத்​துக்​குகு மாநிலம் அதன் விலை சற்று மாறு​படும்.

இந்நிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று (அக்.1) உயர்த்தி உள்ளன. இருப்பினும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டுப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றப்படவில்லை. சென்னையில் வீட்டு பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் ரூ.957.50-க்கு விற்பனை ஆகிறது.

இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.66.50 என்று உயர்ந்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.2,983 என தற்போது விற்பனை ஆகிறது. கடந்த ஜூலை மாதம் வணிக சிலிண்டர் விலை ரூ.177, ஆகஸ்ட் மாதம் ரூ.200 என்று குறைந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ரூ.10.50 என வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு: சென்னையில் ரூ.2,983-க்கு விற்பனை
‘இது பேட்டிங் மட்டும்தான், கிரிக்கெட்டே அல்ல’ - சாதனை சேஸிங்கிற்குப் பிறகு கம்பீர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in