சிகரெட், பான் மசாலா விலை உயர்ந்தது!

சிகரெட், பான் மசாலா விலை உயர்ந்தது!
Updated on
1 min read

புதுடெல்லி: பழைய ஜிஎஸ்டி வரி விதிப்பில் சிகரெட், பான் மசாலா, பீடிக்கு 28% வரி விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிகரெட், பான் மசாலாவுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப் பட்டது. பீடிக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இது தொடர்பாக கலால் சட்ட திருத்த மசோதா, சுகாதார மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து, புகையிலை, வாசனை புகையிலை, குட்கா பேக்கிங் இயந்திரங்கள் விதிகள் 2026 என்ற அரசாணை வெளியிடப்பட்டது. இந்த புதிய விதிகள் மற்றும் சிகரெட், பான் மசாலா தொடர்பான வரி விகிதங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான விலை உயர்ந்துள்ளது.

சிகரெட், பான் மசாலா விலை உயர்ந்தது!
மத்திய பட்ஜெட்: சிஐஐ உட்பட பல்வேறு தொழில் துறையினர் வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in