பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு - ஒரே வாரத்தில் இரண்டாவது முறை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மேற்காசிய போர் காரணமாக உலக அளவில் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் மாற்றமின்றி இருந்தது. இந்தச் சூழலில் கடந்த 15-ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அந்த வகையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டது.

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதே கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்த மோதலுக்கு முன்னதாக ஒரு பேரல் 70 - 72 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, பதற்றத்தின் உச்ச கட்டத்தில் 120 டாலரை கடந்தது. தற்போது 104 - 110 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகி வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தற்போது இந்தியாவில் உயர்ந்துள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும் இறக்குமதிச் செலவை அதிகரிக்க செய்துள்ளது.

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு:

இந்நிலையில், இன்று (மே 19) பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 90 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.77-ல் இருந்து ரூ.98.64 என உயர்ந்துள்ளது. அங்கு டீசல் விலை ரூ.90.67-ல் இருந்து ரூ.91.58 என விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை 82 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.104.49 என விற்பனை ஆகிறது. டீசல் விலை 86 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.96.11 என விற்பனை ஆகிறது.

கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 96 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.109.70 என விற்பனை ஆகிறது. டீசல் விலை 94 பைசா உயர்ந்து, ஒரு லிட்டர் 96.07 என விற்பனை ஆகிறது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
FIFA WC 2026: லூகா மோட்ரிச் தலைமையில் குரோஷியா அணி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in