ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை

3-வது கட்டமாக 700 மெட்ரிக் டன் கொள்முதல்
ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்கிறது.

சென்னை கோயம்பேட்டில் மொத்த விலையில் நாசிக் வெங்காயம் ஒரு கிலோ ரூ.50-க்கும், சில்லறை விலையில் ரூ.70-க்கும் விற்கப்படுகிறது. மேலும், ஆந்திரா வெங்காயம் கோயம்பேட்டில் மொத்த விலையில் ரூ.40-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெங்காயத்தை தமிழக அரசே கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின்கீழ் இயங்கும் ரேஷன் கடைகள் வாயிலாக ஒரு குடும்ப அட்டைக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவரை 2 கட்டங்களாக வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 3-வது கட்டமாக 700 மெட்ரிக் டன் வெங்காயத்தை தேசிய நுகர்வோர் கூட்டுறவில் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.

இந்த வெங்காயம் சென்னை, தண்டையார்பேட்டை சரக்கு ரயில் முனையத்துக்கு நேற்று வந்தடைந்தது. இதை கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் பார்வையிட்டு, ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை
காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்று சென்னை வருகை: முதல்வர் விஜய்யை சந்திக்க திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in