ஒரு பவுன் தங்கம் ரூ.1,02,560-க்கு விற்பனை: இன்றைய நிலவரம் என்ன?

Gold price

தங்கம் விலை

Updated on
1 min read

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.25) பவுனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1,02,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே, தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அன்றாடம் விலை உயர்ந்து வருகிறது.

சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அமெரிக்​கா​வில் இறக்குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில் இன்று (டிச.25) தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,560 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,45,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Gold price
இயேசுபிரான் காட்டிய அன்பு, சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in