

வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோர் இந்திய பங்குச் சந்தையில் போர்ட்போலியோ முதலீட்டு திட்டத்தின் கீழ் (பிஐஎஸ்) முதலீடு செய்யலாம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் நேற்று அறிவித்தார்.
ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் சிறப்பு வங்கி கணக்கு மூலம் அவர்கள் இந்திய பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கி, விற்கலாம். இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால், கடந்த ஆண்டில் வெளிநாட்டு முதலீட் டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து பங்குகளை விற்று வெளியேறினர். இந்த ஆண்டிலும் பங்குகளை விற்று வருகின்றனர்.
இந்த நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வழக்கமாக தனிநபர் முதலீட்டு வரம்பு 5% ஆகவும், ஒரு நிறுவனத்தின் முதலீட்டு வரம்பு 10% ஆகவும் உள்ளது. தற்போது வெளிநாடுவாழ் இந்தியரின் தனிநபர் முதலீடு 10% ஆகவும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒட்டுமொத்த முதலீட்டு வரம்பு 24% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.