மரபுசாரா எரிசக்தி உற்பத்தி 50% அதிகரிப்பு: பாரத் மின்சார உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

மரபுசாரா எரிசக்தி உற்பத்தி 50% அதிகரிப்பு: பாரத் மின்சார உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
Updated on
1 min read

புதுடெல்லி: ​நாட்​டின் மரபு​சாரா எரிசக்தி உற்​பத்தி 50 சதவீதம் அதி​கரித்​திருக்​கிறது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி துவாரகா பகு​தி​யில், “பாரத் மின்​சார உச்சி மாநாடு” நேற்று தொடங்​கியது. இந்த மாநாடு வரும் 22-ம் தேதி வரை 4 நாட்கள் நடை​பெற உள்​ளது. இதில் உள்​நாடு மற்​றும் வெளிநாடுகளை சேர்ந்த 25,000-க்​கும் மேற்​பட்ட பிர​தி​நி​தி​கள் பங்கேற்று உள்​ளனர். மாநாட்டை ஒட்டி சிறப்பு கண்​காட்சி நடைபெறுகிறது. 500-க்​கும் மேற்​பட்ட அரங்​கு​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன.

மாநாட்​டின் முதல் நாளில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் உரையை மத்​திய எரிசக்​தித் துறை செய​லா​ளர் பங்​கஜ் அகர்​வால் வாசித்தார். அதில் பிரதமர் மோடி கூறி​யிருப்​ப​தாவது: 500 ஜிகாவாட் இலக்கு.. வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யித்து உள்​ளோம். இதற்கேற்ப நாட்​டின் எரிசக்தி உள்​கட்​டமைப்பு தொடர்ந்து வலுப்படுத்​தப்​பட்டு வரு​கிறது. மரபு​சாரா எரிசக்தி உற்​பத்தி 50 சதவீதம் அதி​கரித்​திருக்​கிறது.

வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் மரபு​சாரா எரிசக்தி உற்​பத்​தியை 500 ஜிகா​வாட்​டாக அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​ பட்டு இருக்கிறது. ஒரே சூரியன் - ஒரே உலகம், பிஎம் சூரிய கர் உள்ளிட்ட பல்​வேறு திட்​டங்​கள் வெற்​றிகர​மாக செயல்படுத்தப்பட்டு வரு​கின்​றன. அணு சக்தி மின்​சார உற்பத்தியை அதி​கரிக்க சாந்தி சட்​டம் இயற்​றப்​பட்டு உள்​ளது. இந்த நேரத்​தில் சர்​வ​தேச முதலீட்​டாளர்​கள் இந்​திய எரிசக்திதுறை​யில் அதிக அளவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்​கிறேன். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​தார்.

மத்​திய மின்​சா​ரத் துறை அமைச்​சர் மனோகர் லால் கட்​டார் பேசும்​போது, “மின்​சா​ரம் என்​பது எரிசக்தி மட்​டும் கிடை​யாது. நாட்​டின் வளர்ச்​சிக்​கான ஏணி ஆகும். உலக நாடு​களை ஒப்பிடும்போது இந்​தி​யா​வில் மின் கட்​ட​ணம் மிக​வும் குறை​வாக உள்​ளது. கடந்த 10 ஆண்​டு​களில் புதி​தாக 2.09 லட்​சம் கி.மீ. தொலை​வுக்கு புதி​தாக மின் தடங்​கள் அமைக்​கப்​பட்டு உள்​ளன” என்று தெரிவித்தார்.

மாநாடு தொடர்​பாக மத்​திய மின்​சாரத் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: நாடு முழு​வதும் நிலக்​கரியை அடிப்​படை​யாக கொண்ட அனல் மின் நிலை​யங்​கள் மூலம் 43.77 சதவீத மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. சூரிய சக்​தி, காற்​றாலை, நீர் மின் நிலை​யங்​கள், அணு மின் நிலை​யங்​கள் மூலம் 50.56 சதவீத மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​படு​கிறது.

இதன்​படி மரபு​சாரா எரிசக்தி உற்​பத்தி 50 சதவீதத்​தைத் தாண்டி உள்​ளது. டெல்லி மாநாட்​டின் மூலம் இந்​திய எரிசக்தி துறை​யில் ரூ.50 லட்​சம் கோடி முதலீட்டை ஈர்க்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. குறிப்​பாக இந்​தி​யா​வின் சூரிய மின் உற்​பத்​தி, காற்​றாலை, நீர் மின் திட்​டங்​களில் அதிக அளவில் முதலீடு​களை ஈர்க்க முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. இவ்​வாறு மத்​திய மின்​சா​ர துறை வட்டாரங்​கள்​ தெரிவித்​தன.

மரபுசாரா எரிசக்தி உற்பத்தி 50% அதிகரிப்பு: பாரத் மின்சார உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
விளாத்திகுளம் மாணவி கொலையில் தேடப்பட்ட குற்றவாளி 10 நாட்களுக்குப் பிறகு கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in