ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
Updated on
1 min read

மும்பை: இந்​திய ரிசர்வ் வங்கி​யின் வழக்​க​மான நிதிக் கொள்கைக் குழுக்கூட்​டம் மும்​பை​யில் 2 நாளாக நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்​குப் பின்​னர் ஆளுநர் சஞ்​சய் மல்​ஹோத்ரா நேற்று கூறிய​தாவது: ரெப்​போ வட்டி விகிதத்​தில் மாற்​றம் எது​வும் செய்​யப்​பட​வில்​லை. அது 5.25% ஆகவே தொடர்ந்து நீடிக்​கும். 2026-27 நிதி​யாண்​டுக்​கான பொருளா​தார வளர்ச்சி மதிப்​பீடு 6.6% லிருந்து 6.7% ​ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

பணவீக்க மதிப்​பீடு 5.1% லிருந்து 5​ ஆக குறைக்​கப்​பட்​டுள்​ளது. பிளாஸ்​டிக் ரூபாய் நோட்​டு​களை பல்​வேறு காலநிலைகளில் சோதனை செய்ய உள்​ளோம். இந்த நோட்​டு​கள் அதி​கம் நீடித்து உழைக்​கும் தன்​மை​யும், நீண்ட ஆயுட்​கால​மும் கொண்​ட​வை.

முதல்​கட்​ட​மாக ரூ.10, ரூ.20 மதிப்​புடைய பிளாஸ்​டிக் நோட்​டு​கள் சோதனை முறை​யில் புழக்​கத்​தில் விடப்பட உள்​ளன. இந்​த சோதனை முடிவு​களின்அடிப்​படை​யில், 2027-28-ல் நாடுமுழு​வதும் முழு அளவில் பிளாஸ்​டிக் ரூபாய் நோட்​டு​களை அறி​முகப்​படுத்த திட்​ட​மி்டப்பட்​டுள்​ளது. புதிய பிளாஸ்​டிக் நோட்​டு​கள் அறி​முகப்​படுத்​தினாலும், தற்​போது உள்ள ரூபாய் நோட்​டு​கள் செல்​லுபடி ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு புத்துயிர் - ரூ.150 கோடியே ஒதுக்கியதால் விவசாயிகள் ஏமாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in