“ராகுல் கூறுவது போல் இந்திய பொருளாதாரத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை” - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

Updated on
1 min read

புதுடெல்லி: மத்​தி​யில் பிரதமர் நரேந்​திர மோடி அரசு பொறுப்பேற்று 12 ஆண்​டு​கள் நிறைவடைந்​ததைக் குறிக்​கும் வகை​யில் ‘விக்​சித் பாரத் சங்​கல்ப் சமாவேஷ்' என்ற கூட்​டம் பெங்களூரு​வில் நேற்று நடை​பெற்​றது.

இதில் பாஜக தொண்​டர்​களிடையே நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசி​ய​தாவது: ”எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி இந்தியா​வின் சாதனை​களைக் குறைத்து மதிப்​பிடு​கிறார். மேற்கு ஆசிய போர் காரண​மாக இந்​தி​யா​வுக்கு ‘பொருளா​தார சுனாமி' காத்​திருக்​கிறது என்ற ராகுலின் எச்​சரிக்கை அர்த்​தமற்​றது, கரோனா பெருந்​தொற்று நோய் மற்​றும் மேற்கு ஆசிய மோதல்​கள் போன்ற உலகளா​விய சவால்​களுக்கு மத்​தி​யிலும் இந்​தி​யா​வின் பொருளா​தார அடித்​தளம் வலு​வாக உள்​ளது.

மக்​களவை​யில் ராகுல் பேசும் போதெல்​லாம், அடுத்த சில வாரங்களில் எல்​லாம் அழியப் போகிறது, பெரிய ஆபத்து காத்​திருக்​கிறது என்று கூறுகிறார். ஆனால், இந்​தி​யா​வுக்கு அப்​படி எந்த ஆபத்​தும் இல்​லை. மாறாக, ஆண்​டுக்கு ஆண்டு உலகிலேயே மிக வேக​மாக வளரும் பொருளா​தா​ர​மாக இந்​தியா திகழ்​கிறது. இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

<div class="paragraphs"><p><em>நிர்மலா சீதாராமன்</em></p></div>
அரசு பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்: கல்வித் துறை உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in