புதிய தொழிலாளர் சட்டங்கள் ஏப்ரல் 1-ல் அமல்

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஏப்ரல் 1-ல் அமல்
Updated on
1 min read

புதுடெல்லி: வரும் ஏப்​ரல் 1-ம் தேதியி​லிருந்து புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்​திய அரசின் உயர​தி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: தொழிலா​ளர் நலனுக்​கான பழைய 29 சட்​டங்​களை ஒருங்கிணைத்து 4 புதிய தொழிலா​ளர் சட்​டங்​களை மத்​திய அரசு உரு​வாக்​கி​யுள்​ளது. அதன்​படி, ஊதிய சட்​டம் 2019, தொழிலக உறவு விதி 2020, சமூக பாது​காப்பு சட்​டம் 2020, பணிப் பாது​காப்​பு, சுகா​தா​ரம், பணிச்​சூழல் விதி 2020 ஆகிய 4 சட்​டங்​களை அமல்படுத்​து​வதற்​கான அறிவிக்கை கடந்த நவம்​பர் 21ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

இந்த 4 புதிய சட்​டங்​களை​யும் வரும் ஏப்​ரல் 1-ம் தேதி முதல் முழுமை​யாக செயல்​பாட்​டுக்கு கொண்டு வர மத்​திய அரசு திட்டமிட்​டுள்​ளது. அதற்​கான வரைவு விதி​களை தொழிலா​ளர் மற்றும் வேலை ​வாய்ப்பு அமைச்​சகம் விரை​வில் வெளியிடும். பொது​மக்​களின் கருத்து கேட்​புக்​காக 45 நாட்​கள் அவகாசம் அளிக்கப்படும். அதன் பிறகு தேவைப்பட்டால் மாற்றங்களுடன் அமலுக்கு வரும். இவ்​வாறு அந்​த அதி​காரி தெரிவித்​தார்​.

புதிய தொழிலாளர் சட்டங்கள் ஏப்ரல் 1-ல் அமல்
சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இல்லை: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்திய அமைச்சர் சிந்தியா விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in