

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணைக்கொள்முதல்விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து, ஒரு முட்டை ரூ.6.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டை கொள்முதல் விலை மேலும் 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டை ரூ.6.65 என நிர்ணயம் செய்யப்பட்டது. கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை இந்த அளவை எட்டுவது இதுவே முதல்முறையாகும்.
பிற மண்டலங்களில் முட்டை விலை (ஒன்றுக்கு): சென்னை – ரூ.7.30, பர்வாலா – ரூ.6.99, பெங்களூரு – ரூ.7.20, டெல்லி – ரூ.7.25, ஹைதராபாத் – ரூ.6.80, மும்பை – ரூ.7.40, மைசூரு – ரூ.7.35, விஜயவாடா – ரூ.7.15, ஹொஸ்பேட் – ரூ.6.60, கொல்கத்தா – ரூ.7.45.
கோழி விலை: பிராய்லர் கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.151 எனவும், முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.110 எனவும் தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயம் செய்துள்ளது.